பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - பூர்ணசந்திரோதயம் - 5 இருப்பின், அவன் ஒரு rணநேரத்தில் அவளைப் பிடித்திருப்பான். மேற்படிசாமான்கள் குறுக்கிட்டமையாலும், அவள் அவற்றிற்கப்பால் போய் மறைந்து மறைந்து ஒடினாள் ஆதலால், அவன் அவளிடம் நெருங்க சாத்தியமில்லாமல் இருந்தது. ஆகவே, சிறிது நேரத்தில் அவனது உக்கிரமும் ஆவேசமும் பன்மடங்கு அதிகரித்தன. அவன் மேஜைகளின்

மேலும், பூத்தொட்டிகளின் மேலும் தலைகால் தெரியாமல் பாய்ந்து அவைகளைப் புரட்டிக் கவிழ்த்து அவளிடம் நேராகப் போய்ச்சேர எத்தனிக்க, அவள் முன்னிலும் பதினாயிர மடங்கு அதிக விசையோடு அம்பு பாய்வதுபோல அங்குமிங்கும் பாய்ந்து, ரதிகேளிவிலாஸம் இருந்த பக்கமாகப் போய், அவ்விடத்திலிருந்த கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு அதற்குள் புகுந்து கதவை மூடி அப்புறம் தாளிட்டுக்கொள்ள அதைக் கண்ட கட்டாரித்தேவன் கடுங்கோபமடைந்து, அந்தக் கதவண்டைபோய் தனது கையை முஷ்டியாகச் செய்து கொண்டு ஓங்கி அந்தக் கதவில் ஒரு குத்துக்குத்தவே, அது சுக்கல் சுக்கலாக உடைந்து கலகலவென்று கீழே கொட்டிப் போய்விட்டது. அவன் அதைக் கடந்து ரதிகேளி விலாஸத்திற்குள்ளும் லீலாவதியைத் தொடர்ந்து ஒட, அவள், “அப்பா அப்பா நேற்று வந்து என்னைத் தூக்கிக் கொண்டு போன திருடன் மறுபடி வந்திருக்கிறான்! அப்பா எழுந்திருங்கள் என்று கூச்சலிட்டுக் கொண்டு முன்னால் ஒட, அந்தக் கூக்குரலைக்கேட்டு திடுக்கிட்டு விழித்துக்கொண்ட மருங்காபுரி ஜெமீந்தார் உண்மையை ஒரு rணத்தில் யூகித்துக்கொண்டு, ‘யாரடாஅது? யாரடா அது? நில் நில்; அந்தக் குழந்தையை ஒன்றும் செய்யாதே’ என்று அதட்டிக்கொண்டு சடேரென்று கட்டிலை விட்டுக் கீழே குதித்துக் கட்டாரித்தேவனிடம் வந்து அவனது கையைப் பிடித்துக் கொண்டார். இரண்டொரு கஜதூரத்திற்கு அப்பால் ஒடிய லீலாவதி சகிக்க இயலாத அபாரமான கிலியினாலும் நடுக்கத்தினாலும் மேற்கொள்ளப் பட்டவளாய் மூர்ச்சித்து வேரற்ற மரம் போல அப்படியே தரையில்