பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பூர்ணசந்திரோதயம்-5 போகுமுன் ஜெமீந்தாரினது மாளிகை முழுதும் ஒரே நெருப்புப் படலமாக நிறைந்து ஆகாயத்தை அளாவி எரித்தது. எங்கும் நெருப்பும், புகையுமே மயமாக மூடிக்கொண்டன. அண்டை வீட்டுக்காரர் எல்லோரும், “நெருப்பு நெருப்பு” என்று சமுத்திர கோஷம்போலப் பெருத்த ஆரவாரம் செய்துகொண்டு வெளிக் கிளம்பினர்.

42-வது அதிகாரம்

ரகஸியமான நண்பர்

கோலாப்பூர் சிறைச்சாலையில் அடைபட்டிருந்த நமது கலியாணசுந்தரத்தை ஒரு நாளிரவில் அவ்விடத்திலிருந்து வைத்தியசாலைக்கு அழைத்துக்கொண்டு போன காலத்தில், இடையிலிருந்த ஒரு பனந்தோப்பில் சில முரட்டு மனிதர்கள் திடீரென்று தோன்றி அந்த வண்டியை வளைத்துக் கொண்டு காசாரிகளையும், போலீஸ் சிப்பந்திகளையும் அடித்து வீழ்த்தியது முதலிய விவரம் முன்னரே சொல்லப்பட்டது அல்லவா? .

அவ்வாறு திடீரென்று தோன்றிக் கலியாணசுந்தரத்தை விடுவித்தவர்களுள் மற்ற எல்லோரிலும் பொதியனாகவும் முக்கியஸ்தனாகவும் காணப்பட்ட மனிதன், ‘ஐயா! நாம் இவ்விடத்தில் இனி ஒரு கடின நேரங்கூடத் தாமதம் செய்யக் கூடாது. இதோ பக்கத்தில் ஒரு பெட்டி வண்டி ஆயத்தமாக நிற்கிறது. நாமெல்லோரும் போய் அதில் ஏறிக் கொண்டு சீக்கிரமாகப் போய்விட வேண்டும். பின்னால் யாராவது வந்து வழியில் கிடக்கும் போலீஸாரிடம் கேட்டு விஷயங்களைத் தெரிந்துகொண்டு நம்மைத் தொடர்ந்து வந்தாலும் வருவர். அல்லது மேற்படியார் கோலாப்பூரிலுள்ள கமிஷனருக்குச் செய்தி சொல்லி அனுப்பினால், அவர் வேறு பல போலீஸ்