பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 93 அங்கேயுள்ள மனிதருக்குத் தெரிவித்ததன் மேல், அவர் உம்மை அனுப்பி இருப்பாரோ? ஐயா! நீர் உண்மையை மறைக்காமல் சொல்லும் ; உம்மை அனுப்பியது யார்? அவர் என்ன கருத்தோடு என்னை விடுவிக்கிறார். உமக்குத் தெரிந்ததை வெளிப்படையாகச் சொல்லும், பரவாயில்லை.

பஞ்சண்ணா:- ஐயா! நான்தான் ஏற்கெனவேயே சொல்லி விட்டேனே அந்த மனிதர் யாரென்பதை நான் வெளியிடுகிற தில்லை என்று நான் பிரமாணிக்கம் செய்து கொடுத்தி ருக்கிறேன். ஆகையால் நான் அதைச் சொல்லக் கூடவில்லை. மற்ற விவரமெதுவும் எனக்குத் தெரியாது. அவர் என்ன கருத்தோடு உம்மை விடுவிக்கிறார் என்பதும் அவர் உமக்கு அனுகூலமானவரா அல்லது பிரதிகூலமானவரா என்பதும் எனக்குச் சுத்தமாய்த் தெரியாது. நான் வேண்டுமென்று உண்மையை மறைக்கிறவனல்ல. நீர் என்மேல் வருத்தப் பட்டுக்கொள்வதில் உபயோகமில்லை.

கலியாண:- (அதிக வியப்பும் பிரமிப்பும் அடைந்து) சரி; உம்மைப் பார்த்தால் கபடமற்ற மனிதராகத்தான் தோன்றுகிறது. நீர் சொல்வதை நான்நம்புகிறேன். நீர்அந்த மனிதருடைய பெயர் முதலிய விவரம் எதையும் சொல்லவேண்டாம். அவர் ஆணா பெண்ணா என்பதையாவது சொல்லலாமா?

பஞ்சண்ணா:- அதையும் நான் சொல்லக்கூடாது.

கலியாண:- (நிரம்பவும் கலக்கமடைந்து சிறிது யோசனை செய்து) சரி; அது போகட்டும். இன்னும் ஒரே ஒரு விஷயம் கேட்கிறேன்; அதையாவது சொல்லமுடியுமா?

பஞ்சண்ணா:- என்ன விஷயம்? நான் சொல்லக் கூடியதாக இருந்தால், சொல்லத் தடையில்லை.

கலியாண:- உம்மை இங்கே அனுப்பிய மனிதருடைய வீட்டில் ஷண்முகவடிவு என்ற பெண் யாராவது வந்திருக்கி றாளா? அல்லது அந்தப் பெண்ணைப் பற்றி அந்த மனிதர்