பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

குறிப்பினைக் கூறி அதற்குப் பல ஆதாரங்களைத் தருகின்றனர். அவரது கருத்துக்குப் பக்கப் பலமாக பழங்காலத்தில் திபேத்தியர்கள் பயன்படுத்திய சித்திரத் தொங்கலாடையையும், சித்திரம் வரையப் பெற்ற கம்பளிஆடைகளையும் (Tapestry , அவற்றின் வண்ணப் படங்களையும் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்.

துணிகளில் வரையப்பட்ட படங்களும் சித்திரங்களும் சமயக் கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையாகும். எதிர்காலத்தைக் கணித்து அதிர்ஷ்டத்தைக் கூறுகின்ற ஜோசியம் (Fore tell) பார்ப்பதற்காக அவை பயன்பட்டவையாகும்.சமயத்தின் சாதனங்களாகப் பயன்பட்ட சித்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, சீட்டுகளில் பொறிக்கப்பட்டிருக்கும் படங்களும் எழுதப்பட்டிருக்கலாம் என்பது தான் அந்த வரலாற்றாசிரியர்களின் வாதமாகும்.

இந்து மத புராணத்தில், அர்த்தநாரி என்றொரு பெண் தெய்வம் உண்டு. சித்திரத்தில் வரையப் பட்டிருக்கின்ற அந்தப் பெண் தெய்வத்திற்கு நான்கு கைகளும், நான்கு கால்களும் இருக்கின்றன. அதனுடைய நான்கு கைகளிலும் நான்கு விதமான பொருட்கள் இருப்பதாகவும் காட்டப்பட்டிருக்கின்றன.

ஒருகையில் வாள் (Sword); இரண்டாவது கையில் வளையம் (Ring); மூன்றாவது கையில் கிண்ணம்