பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

காரணம் கைகள் வலிமை அதிகம் இல்லாதவை என்பதால்.

எறிவது எப்படி?

பெண்களுக்கு பரந்த தோள் அமைப்பு இல்லை. குறுகிய தோள்கள், நீளமற்ற கரங்கள், அகன்ற இடுப்பெலும்புப் பகுதி இருப்பது எறிவதற்கு உதவுவதாகாது.

இடுப்பைச் சுற்றியுள்ள அதிகமான கொழுப்புப் பகுதியானது கைகள் முழு பலத்துடன் இயங்குவதைக் தடுக்கின்ற தன்மையில் இருக்கிறது. முழங்கை மூட்டும் அவ்வளவு சக்திவாய்ந்ததல்ல. முன்புறக் கைகளின் மூட்டமைப்பும் வெளிப்புறம் பார்ப்பது போல அமைந்திருப்பதால், எறியும் முயற்சிக்கு ஏற்றதாகவும் இல்லை. பெண்களின் உடல் அமைப்பும் எறியும் போட்டிகளுக்கு இணக்கமாக இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.

இதுவரை உடலமைப்பின் தன்மைகளைக் கன்டறிந்தோம்.

இதயமும் நாடித்துடிப்பும்

பெண்களுக்கு இதயத்தின் அளவு ஆண்களின் இதயத்தை விட சிறியது தான். ஆனால் நாடித் துடிப்பு வேகமாகவும், அதிகமாகவும் உடையதாக விளங்குகிறது. பெண்கள் பயிற்சி செய்யும் பொழுது