பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

முடித்த ஏழு பெண்களும், தட்டுத்தடுமாறி, திக்கித் திணறி, மூச்சுத் திணறி வந்து நின்றனர்.

இப்படி ஒரு போட்டி அவசியம்தானா? பெண்களால் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது. இப்படிப்பட்ட நிகழ்ச்சியே இனிமேல் வேண்டாம் என்று வாதம் புரிகின்ற அளவுக்கு வாய்ப் பேச்சுத் தொடர்ந்தது. அவர்கள் அனைவருக்கும் சரியான முறையில் பயிற்சி கொடுக்கப்படவில்லை, என்பதை யாரும் அறியவில்லை. இந்த வாய்ப்பைப்பயன்படுத்தி, இரண்டு நாடுகளில் இருந்த பத்திரிகைகள், பெண்கள் ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெறுவதைத் தடை செய்திட வேண்டும் என்றும் தலையங்கங்கள் எழுதித் தீர்த்தன. என்றாலும், அவர்களின் அந்தரங்க ஆசைகள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, பெண்களுக்கானப் போட்டியிடும் வாய்ப்புகள் மேலும் அதிகமாகவே ஏற்படும் சூழ்நிலை உண்டாயிற்று.

1932ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் எனும் நகரில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்ற போது. மேலும் 4 போட்டி நிகழ்ச்சிகள் பெண்கள் போட்டிகளில் சேர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். வரவேற்கத் தகுந்த வரலாற்றுக் குறிப்பாகும்.

வேலெறிதல், 80 மீட்டர் தடை தாண்டி ஓட்டம், நீளத் தாண்டல் மற்றும் 400 மீட்டர்