பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தளர்ச்சியும் மாத விலக்குத் தொடங்கியவுடன் முடிந்து போகின்றன. காரணம் வலி குறைந்து, போகிறது. அதற்குப் பிறகு கொள்கின்ற தற்காப்புப் பணிகள் தன்னம்பிக்கையை ஊட்டி, திறம்படச் செயல்பட வைக்கின்றன.

மாத விலக்குக்கு முன்னர் அவர்கள் களைத்துப் போவதும், எரிச்சல்பட்டுக் கொள்வதும், உணர்ச்சி வசப்பட்டுத் தவிப்பதும், மனம் உடைந்து: போவதும் இயற்கையான ஒன்று தான். ஆனால், அத்தனை அழிவுச் சக்திகளும், விலக்குப்பின்னர் வெளியேறிப் போகின்றன. விடுதலை அளித்து விடுகின்றன. வேகத்தையும் விவேகமான ஆற்றலையும் அல்லவா அளித்து விடுகின்றன.

கர்ப்பமும் ஒகு காரணம்

பெண்கள் வீராங்கனைகளாக விளங்கலாம். ஆனாலும் அவர்களும் அன்புக்குரியவர்கள் தான். திருமணமானவர்கள் தாய்மைப் பேறுக்கும் ஆளாவார்கள் அல்லவா! அப்பொழுது அவர்கள் நிலை எப்படி என்ற ஒரு கேள்வியும் எழலாம்

தாய்மை அடைந்து முதல் மூன்று மாதங்கள் வரையில் கூட எந்த விதமான கஷ்டமுமின்றி விளையாட்டுக்களில் ஈடுபடலாம் என்று மருத்துவர்கள் தைரியமாகக் கூறுகின்றார்கள்.

அதற்குப் பிறகு குழந்தை வயிற்றில் வளர வளர தாயின் எடை அதிகமாகிப்போவது, அவளின்