பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

இந்த உள்ளுணர்வின் விளைவாகவே ஒவ்வொரு இஸ்லாமிய சிறப்புமிகு நாட்களின்போது, அதன் முக்கியத் துவத்தைப் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து “தினமணி” யில் எழுதி வந்தேன். வாசகர்களும் பேரார்வத்தோடு படித்துப் பாராட்டி, ஊக்கி வந்தார்கள். குறிப்பாக அதன் ஆசிரியராக இருந்த திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் என் எழுத்தின் மீது காட்டிய மதிப்பும் மரியாதையும் ஆர்வமும் அரவணைப்பும் என்றுமே மறக்க முடியாதவை. அன்னாருக்கு நான் என்றென்றும் கடப்பாடுடையவன்.

‘தினமணி கட்டுரைகள் ஊட்டிய நல்லுணர்வின் தூண்டுதலால் ‘ஓம் சக்தி’ போன்ற இந்து சமயப் பிரச்சார ஏடுகளும் இஸ்லாம் பற்றி எழுதப் பணித்தன. இதை என் கட்டுரைகளுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்.

இக்கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வந்த நண்பர்கள் பலரும் இவற்றைத் தொகுத்து நூலுருவில் வெளியிட வேண்டும் என அடிக்கடி வற்புறுத்தி வந்தார்கள். இதன் மூலம் பிற சமய அன்பர்களும் இஸ்லாமிய நண்பர்களும் கூட இஸ்லாத்தை ஓரளவாவது உரிய முறையில் உணர்ந்து தெளிய வாய்ப்பேற்பட வேண்டும் என்ற கருத்தின் செயல் வடிவே இந்நூல்.

இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்க வேண்டுமென தவத்திரு குன்றக்குடி அடிகளாரை வேண்டினேன். என் மீது என்றுமே பேரன்பு கொண்ட அப்பெருந்தகை நூலை முழுமையாகப் படித்து, அதில் தோய்ந்து என் உள்ளுணர்வுகளை அவர்கட்கேயுரிய முறையில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்கட்கு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள ஈ.சி.ஐ. பேராயர் டாக்டர் எம்.எஸ்றா சற்குணம் என் மீது அளப்பரிய அன்பு கொண்டவர். உரத்த சிந்தனையாளர். அஞ்சா நெஞ்சினர்; ‘யார் என்பதைவிட என்ன என் பதில் அதிகம் கருத்துன்றும் நகைமையாளர். மனித நேய