பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மனித நேயத்திற்கோர் மாநபி


அவனிக்கோர் அருட்கொடையாக வந்துதித்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் பிறந்த நாளை உலகெங்குமுள்ள இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் பேரார்வப் பெருக்கோடு கொண்டாடி மகிழ்கின்றனர்.

நபிகள் நாதரின் வாழ்வும் வாக்கும் மனித குலத்துக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக, அனைவரும் பின்பற்றத்தக்க அழகிய முன் மாதிரியாக விளங்கி வருகிறது.

அவர்தம் சொல்லும் செயலும் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அவர் தம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமுதாய வாழ்க்கையிலும் அரிய குணப் பண்புகளின் ஒட்டு மொத்த உருவகமாகவே வாழ்ந்தார். அவரது வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு மனிதரும் நற்குணக்குன்றாக வாழ முனைய வழிகாட்டுவதாகும்.

இறைவன் தன்னிலிருந்து முதல் மனிதர் ஆதாமையும் அவரினின்றும் முதல் பெண்மணியாகிய ஹவ்வா (ஏவாள்)வையும் உருவாக்கினார் என்பது இறைமறை தரும் செய்தியாகும். எனவே, ஆதாமின் சந்ததியினரான ஒவ்வொரு மனிதனும் இறையம்சமுடையவனாகவே கருதப்படுகிறான். எனவே, அவர்களை உயர்வாக எண்ணு