பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

வற்றை அவனுக்கு (இறைவன்) கற்பித்தான்”. எனக் கூறி ஓதப் பணித்தார்.

இதுவே ஜிப்ராயில் மூலம் அண்ணல் நபி அவர்கட்கு இறைவனால் அளிக்கப்பட்ட முதல் மறைச் செய்தி இதைப் பற்றி திருக்குர்ஆன்,

“நபியே (குர்ஆன் ஆகிய) இஃது இறைவனால்தான் அருளப்பட்டது. இறைவன் கட்டளைப்படி ஜிபுராயில் இதனை உமது இருதயத்தில் இறக்கி வைத்தார்”.

(திருக்குர்ஆன் 26: 192; 95)

“நிச்சயமாக அல்லாஹ்வின் கட்டளைப்படியே ஜிபுராயீல் இதனை உமது இருதயத்தில் இறக்கி வைத்தார்” (2.97)

வஹீ மூலம் இறைச் செய்தி

இவ்வாறு ரமளான் இரவு தொடங்கி பெருமனாரின் இறுதிநாள்வரை 23 ஆண்டுகள் சிறிது சிறிதாக குர்ஆன் திருமறை வஹீயாக அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இறைவன் மொழியை வானவர் உணர்த்துவது ‘வஹீ’ எனப்படும். இதைப் பற்றி திருமறை குறிப்பிடும் போது “அல்லாஹ்வுடன் நேருக்கு நேர் பேசுவதற்குரிய தகுதி மானிடரில் ஒருவருக்கும் இல்லை. எனினும் வஹீயின் மூலமாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு வானவரை அனுப்பி வைத்தோ மனிதரிடம் இறைவன் பேசுகிறான் (42-51). வஹீ மூலம் இறைச்செய்தி பெற்றது எவ்வாறு என்பதைப் பெருமானாரே கூறியுள்ளார்,

“சில சமயம் மணி ஒலிப்பதுபோல் என் காதில் சொற்கள் ஒலிக்கும். அவ்வொலி மூலம் சொல்லப்பட்ட சொற்களை நான் நினைவில் இருத்திக் கொள்வேன். சில