பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13



பேராயர் டாக்டர் எஸ்றா சற்குணம்
அணிந்துரை

எனது இனிய நண்பர் மணவை முஸ்தபா அவர்கள் நாடு போற்றும் நல்ல எழுத்தாளர்; இஸ்லாமியச் சமுதாயத்தின் பெரும் சிந்தனையாளர்; தொய்வற்ற ஆய்வாளர். இயற்பியல் பெளதிகம், பொறியியல், விஞ்ஞானம், இறையியல், இலக்கியம் ஆகிய எல்லா துறைகளிலும் ஒரு வித்தகர். அவரது எழுத்தோவியங்கள், இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை நெறிமுறைகளை எவரும் படித்துப் புரிந்து கொள்ளும் அளவில் அமைந்துள்ளன. அவரது படைப்புகள் கல்லாதவருக்கு ஒரு கலைக்களஞ்சியம் கற்றோருக்கு ஒரு தெளிவுரை; மற்றவருக்கு ஒரு அறிவுரை. எவரும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய இனிய எடுப்பான நடையில் பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம் அமைந்துள்ளது.

நண்பர் முஸ்தபா திங்கள்தோறும் பல நூறு புது வார்த்தைகளை தமிழ் உலகிற்கு உற்பத்தி செய்து விநியோகம் செய்து கொண்டிருக்கும் ஒர் அறிவுத் தொழிற் பேட்டையாகத் திகழ்கின்றார். இதனால் எவ்விதச் சிரமமும் இன்றி வார்த்தைகள் அமுதசுரபியாக அவரிடமிருந்து புறப்பட்டு வருகின்றன.

பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம் - நாடு தேடும் - காலந் தேடும் - அரிய நூல்.

அயோத்தி சம்பவத்தால் மனம் உடைந்து காணப்படும் நாட்டின் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமயத்தைச் சார்ந்துள்ள 90 சதவிகித மக்களில் ஒருவரான, அதிலும் இஸ்லாத்தைச் சேர்ந்த முஸ்லிம் மேதை, என் அன்புச் சகோதரர் மணவை முஸ்தபா, அந்த அயோத்தி