பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

191

இறைவணக்க முறைகளாகவே அமைந்துள்ளன. அதுமட்டு மல்ல, இஸ்லாமியக் கடமைகள் ஒவ்வொன்றும் மனிதனைத் தியாக சீலனாக உருமாற்றும் உந்து சக்தி களாகவே அமைந்து இறைவழி நெறிப்படுத்தி வருகின்றன.

தியாக உணர்வே
இறை வணக்க அடிப்படை

ஐவேளைத் தொழுகையில் முதல் தொழுகை ஐந்தரை மணிக்குத் தொடங்குகிறது. ஐந்து மணிக்கும் முன்னதாகவே எழுந்து உடல் சுத்தம் உள்ளச் சுத்தத்தோடு தொழுகைக்குத் தயாராக வேண்டும். இதற்காக தொழுகையாளி இன்பமான காலைத் தூக்கத்தைத் துறந்து, இறைவனுக்காகத் தியாகம் செய்து, அவனருள் வேண்டி அடிபணிகிறார். ரமளான் மாத நோன்பின்போது பகலில் தான் விரும்பி உண்ணும் சுவைான உணவு வகைகள், இனிய பானங்கள் புகைப்புகள் அனைத்தையும் முற்றாகத் துறந்து, தியாகப் பிழம்பாகிறார். தான் முயன்று உழைத்துத் தேடியபொருளை நாற்பில் ஒரு பங்கு என்ற கணக்கில் வறுமைவாய்ப்பட்ட வயோதிகர்கள், உழைக்கவியலா உடல் ஊனமுற்றவர்கள், ஆதரிப்பாரற்ற அநாதைகட்கு ஜகாத்தாக வழங்கித்தன் பொருளைத் தியாகம் செய்கிறார். ஹஜ்ஜின்போது தான் தேடி பொருளும், குடும்பத்தார், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரை யும்விட்டு நீங்குகிறார். இவைகளையெல்லாம் தியாகம் செய்து விட்டதன் அடையாளமாக இறந்தவருக்குப் போர்த்தும் உடையான தைகக்கப்படாத இரு துண்டுத் துணிகளை மட்டும் இஹ்ராம் உடையாக அணிந்த கஃபா இறையில்லம் ஏகுகிறார்.

இவ்வாறு இஸ்லாமியக் கடமைகள் ஐந்துமே இறை வணக்கத்தையும் தியாக உணர்வையும் ஊட்டிய வண்ணம் அவர்களை இறைவழிபேணும் மனிதப் புனிதர்களாக மாற்றுகின்றன.