பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

ஐயமில்லை. அத்துடன் இந்தியா உட்பட உலகெங்கும் தோன்றி மக்களுக்கு நல்வழிகாட்டிய அனைத்து இறை தூதர்களும் அவர்கட்கு இறைவனால் வழங்கப்பட்ட இறை வேதங்களும் ஒவ்வொரு முஸ்லிமாலும் மதிக்கப்பட வேண்டியவை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளத் தெளிவாகும்.

சமயத்திற்கும் சமயத்தவர்களுக்கும்
இடையேயுள்ள இடைவெளி

தாங்கள் எந்த சமயத்தைச் சார்ந்துள்ளார்களோ அந்த சமயம் வகுத்து கூறியுள்ள வாழ்வியல் நெறிகளை தத்துவக் கருத்துகளை உண்மையான உணர்வுகளை தெளிவாகத் தெரிந்து கொள்ளாதவர்களாலேயே மதக் குழப்பங்களும் மோதல்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒரு இந்துவுக்கு மகனாகப் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே இந்துவாக இருப்பவர்கட்கு, ஒரு முஸ்லிமுக்கு மகனாகப் பிறந்த காரணத்தாலேயே ஒரு முஸ்லிமாக நடமாடி வருபவர்கட்கு, ஒரு கிறிஸ்தவனுக்குப் மகனாகப் பிறந்ததனால் மட்டும் தன்னை ஒரு கிறிஸ்தவனாகக் கருதி வாழ்பவர்கட்கு, தங்கள் சமயங்கள் கூறும் வாழ்க்கை வழிமுறைகளை தத்துவக் கருத்துகளை முழுமையாகத் தெரிந்து தெளிவடையும் வாய்ப்புகள் இன்றைய கல்வி முறையால் அறுகி வருகின்றன. எனவே, மதங்களுக்கும் மதப் பெயர்களால் மட்டும் வாழ்பவர்களுக்கும் இடையே மாபெரும் இடைவெளி இன்று ஏற்பட்டு வருகிறது. இதனால் சாமர்த்தியமாக வெறும் மதவெறியூட்டப்படும் இவர்கள், தாங்கள் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கைகள் ஏன்? எதற்காக? என்பதைத் தெளிவாக அறிந்துணரும் திறனற்றவர்களாக இருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். உண்மையான சமய உணர்வு உடையவர்களாக இருந்திருந்தால் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக இராமர் சிலையை வைத்துக் கோயி