பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

அளவுக்கு அவர் பரகதி பெற முடியும். இதற்குரிய இடமாகத் தாங்கள் வாழும் இல்லமும், இதற்கெனவே உருவாக்கப்பட்ட இறையில்லங்களும் அமைந்துள்ளன. எனவே, தனி மனிதத் தொடர்புடைய சமய நடவடிக்கைகள் முழுமையாகச் செயல்பட வேண்டிய இடங்களும் இவை இரண்டும் மட்டுமே. சமுதாய வீதி இதற்குரிய களமல்ல என்பதை ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்து செயலாக்க வேண்டும். பல்வேறு சமய உணர்வு கொண்ட சமுதாய மக்களிடையே சமய உணர்வுகளை, சமயச் சடங்குகளைத் தூக்கிச் செல் வதன் மூலமே அனைத்துப் பிரச்சினைகளும் குழப்பங்களும் தோற்றுவிக்கப்படுகின்றன. கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், விஹார்கள், குருத்துவாராக்களுக்குள் சடங்குகள் நடப்பதாயின் எந்தப் பிரச்சினையும் ஏற்பட வழியில்லாமல் போய்விடும்.

சமயப் பிரச்சினைக்குத்
தீர்வு காண்பது யார்?

சமயம் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையும் சமயத் தலைவர்களாலேயே கையாளப்பட வேண்டுமே யொழிய வெறும் ஒட்டுச் சேகரிப்பையும் அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றத் துடிக்கும் சுய நல அரசியல்வாதிகளால் அல்ல. சமயத்தின்பால் உண்மையான பற்றோ சமய அறிவோ இல்லாத அரசியல் வாதிகளால் உண்மையான சமயத் தத்துவக் கருத்துகளும் சமயச் சிந்தனைகளும் பாழ்படுகின்றன. கேலிக்குறியவையாக் கப்படுகின்றன. இவை உண்மைச் சமயத்துக்கு நேர் மாறானவையாக அமைய நேர்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே அரசியல், அரசியலாக இருக்க வேண்டும். சமயம், சமயமாகவே இருக்க வேண்டும். இரண்டின் தன்மைகளும் வெவ்வேறானவை. இரண்டும் இணைவது விபரீத விளைவுகளுக்கே வழியாயமையும். அதுவும் இந்தியா போன்ற சமயச் சார்பற்ற அரசு இயங்கும் நாட்டில்