பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தேவையான ஓய்வும் அந்த ஓய்வுக்குப் பின்னர் நல்லதொரு தெம்பும் ஏற்படுகிறது என்று ஆசிரியர் விளக்குமிடத்து எந்த அளவில் இஸ்லாம் ஓர் ஏற்றுக் கொள்ளக்கூடிய மார்க்கமாக இருக்கிறது என்பதைத் திறந்த மனதுடன் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் எவரும் ஒத்துக் கொள்ளுவர்.

ஒவ்வொரு முஸ்லிமும் தானம் செய்ய, தனது வருவாயில் இரண்டரை சதவிகிதம் எடுத்து வைக்க, இஸ்லாத்தின் போதனைப்படி நபிகள்நாயகம் அவர்களால் அன்புக் கட்டளையிடப்படுகிறான். பலநூறு ஆண்டுகளாக இந்த ஒழுங்கைக் கடைப்பிடித்த காரணத்தினாலும் இது போன்ற பாரம்பரியம் கிறிஸ்துவ மதபோதனையிலும் காணப்படுகின்றதனாலோ என்னவோ எந்த ஒரு இஸ்லாம் நாடும் கிறிஸ்துவ நாடும் பிறநாடுகளிடமிருந்து கையேந்திப் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் அன்றும் இன்றும் ஏற்பட்டது இல்லை என்பதை இங்கு நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன், எனினும் சில நேரங்களில், சிலவேளைகளில் பங்களாதேஷ் போன்ற ஏழை முஸ்லிம் நாடுகள் நிவாரணப்பணிகள் செய்வதில் போதுமான அளவு ஆர்வமும் காட்டுவது இல்லை என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அவ்வாறே ஹஜ் பயணம் நாடு, வகுப்பு, சாதி, வர்ணங்களுக்கு அப்பாற்பட்டு இஸ்லாமியரை ஒன்றாக இணைக்கின்றது. இதனால் ஒவ்வொரு முஸ்லிமும் அவன் ஒரு தனிமனிதன் அல்ல, கோடிக்கணக்கான இறை மக்களில் அவனும் ஒருவன் என்று பெருமை கொள்ளுகின்றான்.

இஸ்லாமிய சகோதரர்கள், இஸ்லாமிய நாடுகள் ஒருவருக்கொருவர் எவ்வளவுதான் சண்டைபோட்டுக் கொண்டாலும் சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதியை நிலை