பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சகிப்புத் தன்மைக்கோர் பெருமானார்


அனைவரும் ஆதாம்
வழியினரே

உலக மக்கள் அனைவரும் ஆதிப் பிதா ஆதாம் வழி வந்தவர்களே என்ற அடிப்படைக்கிணங்க மனிதர்களிடையே உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற பேதமோ, நிற, மொழி எனும் வேற்றுமைகளோ ஏற்பட ஏதுவில்லை. குலம், கோத்திரம் போன்ற முறைகள் ஒருவரையொருவர் இனங்கண்டு கொள்ளவேயன்றி வேறு எதற்காகவும் இல்லை என்பதைத் திருமறை தெளிவாகக் குறிப்பிடுகிறது.

“மனிதர்களே, நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து தான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால்) உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் என்று பாராட்டிக் கொள்வதற்கில்லை” (திருக்குர்ஆன் 49:13)

உலகெங்கும் இறை தூதர்கள்

காலந்தோறும் மக்களிடையே ஏற்படும் மனமாச் சரியங்களைப் போக்கி அவர்களை இறைநெறியில் வழி