பக்கம்:பொன் விலங்கு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பொன் விலங்கு

பாடிப் புகழ்ந்து கொண்டேகாரிலிருந்து கண்ணாயிரத்தோடு சேர்ந்து இறங்கிவிட்டாள் அம்மா கீழே இறங்கி நின்றுகொண்டு அம்மா, மோகினியையும் இறங்கும்படி கையசைத்துக் கூப்பிட்டாள். மோகினி காரிலிருந்து இறங்கவே இல்லை. "நீ போய்விட்டு வா, அம்மா எனக்குக் காப்பியும் வேண்டாம்; டியும் வேண்டாம்; சீக்கிரமாகப் படத்தைப் பிடித்துக்கொள்ளச் சொல். காலா காலத்திலே வீட்டுக்குப் போய்க் குளித்துவிட்டுக் கோயிலுக்குப் போகணும்..." என்று கடுமையாகவும் கண்டிப்பாகவும் அம்மாவுக்குப் பதில் கூறினாள் மோகினி. - -

'இப்போ நீ இறங்கிவரப் போகிறாயா இல்லையா என்னடீது மரியாதை தெரியாமே!...' என்று அம்மா மிரட்டினாள். பெண் அசைந்து கொடுக்கவே இல்லை. "பரவாயில்லை? முத்தழகம்மா நீங்கள் வாருங்கள். உங்கள் பெண்ணைச் சிரமப்படுத்தவேண்டாம், பாவம் அவளுக்கு நம் வீட்டுக் காப்பி கொடுத்து வைக்கவில்லை போல் இருக்கிறது. மஞ்சள்பட்டி ஜமீன்தார் ரயில்லேருந்து இறங்கறப்பவே, "கண்ணாயிரம் பிளாஸ்க்கிலே உங்கவீட்டுக் காப்பி கொண்டாந்திருக்கியா இல்லியா? அதை முதல்லே சொல்லு.நீகாப்பி கொண்டாரலையின்னா இப்படியே ஊருக்குத் திரும்பிடறேன். நாளைக்கு மறுபடி ரயிலேறி வந்து காப்பியோட உன்னை எதிர்பார்க்கிறேன் பாரு" என்று பேச்சுக்குப் பேச்சு 'முத்தழகம்மா என்ற பேரைக் குழைவோடு சொல்லி விளித்து நாசூக்காகக் குழைந்தார் கண்ணாயிரம். இப்படி நாலுதரம் யாராவது பேரைச் சொல்லிப் போலியாகக் கூப்பிட்டால்கூட அம்மாவுக்கு உச்சி குளிர்ந்து போய்விடும் என்று மோகினிக்கு நன்றாகத் தெரியும். இப்போது கண்ணாயிரம் அம்மாவிடம் குழைந்த குழைவினால் அம்மா தன்னைக் கோபத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதையும் அவள் புரிந்து கொண்டாள். -

'சொன்னால் கேள்! எனக்குக் காப்பி வேண்டாம். நீ மட்டும் போய்விட்டு வாம்மா...' என்று இரண்டாம் தடவையாகவும் அழுத்திச் சொன்னாள் மோகினி. அவள் பிடித்தால் பிடித்த முரண்டுதான் என்று அம்மாவுக்குத் தெரியும். -

'நீ ஒரு நாளைக்கும் உருப்படவே போறதில்லை...' என்று வயிற்றெரிச்சலோடு மகளைப் பார்த்துக் கைகளைச் சேர்த்துச் சொடுக்கி முறித்துவிட்டுக் கண்ணாயிரத்தோடு படியேறி உள்ளே

போனாள் அம்மா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/130&oldid=595059" இலிருந்து மீள்விக்கப்பட்டது