பக்கம்:பொன் விலங்கு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.தா.பார்த்தசாரதி 195

ஊருக்குப் போனாலும் சரி, உங்களுடையவள் ஒருத்தி இங்கிருக்கிறேன் என்ற பவித்திரமான நினைவு உங்களுக்கு இருக்க வேண்டும்.'

மிக மென்மையான தன் நெஞ்சின் உணர்ச்சிகள் தவிக்கத் தவிக்க அவள் இவ்வாறு கூறிக்கை கூப்பியபோது சத்தியமூர்த்தியும் கண்கலங்கிப் போய் இருந்தான். அந்த நிலையில் காப்பி சிற்றுண்டியை எடுத்து வழங்கினாள். அவன் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சிறிதும் எதிர்பாராத கேள்வி ஒன்று அவளிடமிருந்து பிறந்தது.

'நீங்கள் புறப்படுவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?"

"ஏன்? இன்னும் நான்கு நாட்களில் நான் புறப்படவேண்டும்! ஆனால், இப்போதே பிரயாணச் சுறுசுறுப்பு வந்துவிட்டது."

“புறப்பட்டுப் போவதற்கு முன் உங்களை நான் இன்னொரு முறை சந்திக்கவேண்டும்" என்றாள் அவள்.

米 இந்த நூற்றாண்டின் சமூக வாழ்க்கை யில் யார் பெரிய ஆராய்ச்சியாளன் தெரியுமா? நல்லவர் கெட்டவர் பிரித்துக் கண்டுபிடிக்கத் தெரிந்தவன்தான் பெரிய ஆராய்ச்சியாளன். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அப்படிப் பிரித்துக் கண்டு பிடிக்கத் தெரிந்தவர்கள் நம்மிடையே மிகவும் குறைவாயிருக்கிறார்கள்.

米 'இந்த வீட்டில் நீங்கள் மட்டுமே எடுத்து வாசிப்பதற்குரிய பரிசுத்தமான வாத்தியம் ஒன்று உங்களுக்காகவே காத்துக் கிடக்கிறது. என்ற மோகினியின் வாக்கியம் சத்தியமூர்த்தியின் இதயத்தில் ஆழமாகப் பதிந்து கிடந்தது. அவளுடைய நீர் பெருகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/197&oldid=595205" இலிருந்து மீள்விக்கப்பட்டது