பக்கம்:பொன் விலங்கு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 205

எமகாதகன். யார் பணத்தையோ முதலாகப் போட்டு, யார் அழகையோ விளம்பரமாகக் காண்பித்துத் தான் பெரிய மனிதனாகிக் கடைசியில் மற்ற இருவரையும் நடுத்தெருவில் நிற்கும்படி செய்து விடுவான். இந்த விவரத்தை யெல்லாம் அந்தப் பெண்ணுக்கோ, அவள் தாய்க்கோ யார் எடுத்துச் சொல்லப் போகிறார்களா?- பாவம் வழிகாட்டுகிறவர்கள் இல்லாத அநாதைத் திறமைகள் எல்லாம் இந்த நாட்டில் யார் யாருக்கோ பயன்பட்டு வீணாகி அழிய வேண்டும் என்பதுதான் நியதியோல் இருக்கிறது. கண்ணாயிரம் இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாக என் காதில் செய்திகள் விழுகின்றன. இப்படிச் செயல்கள் கண்ணா யிரத்துக்குப் புதுமையில்லை. இப்படிச் செயல்களாலேயே வளர்ந்து வாழ்கிறவர் அவர். இந்தக் கொடுமையைப் புரிந்துகொள்ளாமல் மாட்டிக் கொண்டு பாழாகிறவர்கள் பாடுதான் பரிதாபம். மஞ்சள் பட்டியாரைப் பற்றி நான் கவலையோ, அநுதாபமோ படமாட்டேன். அவரைப் பொறுத்தவரை அவருக்கும் இதெல்லாம் வேண்டியதுதான். தேவைக்கதிகமான வெள்ளைப்பணத்தையும், கறுப்புப் பணத்தையும் வைத்துக் கொண்டு என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று துறுதுறுத்துத் திரிகிறவர்கள் கண்ணாயிரத்தினிடம் சிக்கிக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் மோகினியைப் போன்ற அபலைகள் சிக்கிக்கொள்ளக்கூடாது' என்று குமரப்பன் கூறியிருந்தான். சத்திய மூர்த்தியாவது ஒரு நாகரிகத்துக்குத் கட்டுப்பட்டுக் கண்ணாயிரத்தை அவர் இவர் என்று மரியாதைப் பன்மை கொடுத்துப் பேசுவான். குமரப்பன் அந்த மரியாதையும் கொடுக்க மாட்டான். கண்ணா யிரத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலே ஏக வசனத்தில்தான் வாக்கியங்கள் வரும் அவனுக்கு.

சத்தியமூர்த்தி மறுநாள் மாலை இரயிலில் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு இருந்ததால் மோகினியிடம் ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்தபடி ஊருக்குச் செல்வதற்கு முந்திய தினமாகிய அன்று அவளைக் காணச் சென்றான். குமரப்பன் கண்ணாயிரத்தைப் பற்றிச் சொல்லி எச்சரித்த செய்திகளை யெல்லாம் அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டே போனான் அவன். கண்ணாயிரத்தைப் பற்றி அவளுக்கே நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். இவற்றையெல்லாம் அவளிடம் சொல்வதற்கும் அவளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/207&oldid=595229" இலிருந்து மீள்விக்கப்பட்டது