பக்கம்:பொன் விலங்கு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 237

பணிவுள்ளவனும் உண்மையாக வாழாமல் இருக்கலாம். ஆனால் உண்மையாக வாழ்கிறவன் பணிவில்லாமல் இருக்க முடியாது. உண்மை என்பது எல்லா நல்ல குணங்களையும் இணைக்கிற ஒரு பெருங்குணம். பணிவு அப்படி இல்லை. பிறரைக் கவர்கிற சிறிய குணங்களில் பணிவும் ஒன்று. பலபெரியகுணங்கள்இல்லாதவனிடம் பணிவு என்ற ஒரு சிறிய குணம் இருக்கலாம். ஆனால் உண்மை என்ற ஒரு பெருங் குணமோ எல்லாச் சிறிய குணங்களையும் உடன் கொண்டது."

'அதாவது. அந்தப் பெருங்குணம் உங்களிடம் இருப்பதாக நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையா?”

"ஒருவர் புரிந்துகொண்டு பாராட்ட வேண்டுமென்பதற்காக மட்டுமே உண்மையாக வாழ முடியாது! உண்மையாக வாழவேண்டுமென்பதையே நோக்கமாக வைத்துத்தான் அப்படி வாழ வேண்டும் உண்மையைப் பற்றியே சந்தேகமாயிருப்பவர்கள் உண்மையைப் புரிந்துகொண்டு பாராட்டுவார்கள் என்பதையும் எதிர்பார்க்க முடியாது. உண்மை பெரிய கோபுரத்தைப் போன்றது. கோபுரத்துக்கு அது கோபுரமாக இருக்கிறது என்பதால்தான் பெருமையே ஒழிய அதன் நிழல் பெரியதாக இருக்கிறது என்பதாலே பெருமையாகி விடாது. உண்மையாக வாழ்வதும் அப்படித்தான்.'- இதைக் கேட்டு ஹெட்கிளார்க் முகத்தைக் கோணிக்கொண்டு இடுங்கிய கண்பார்வையால் அவனை வெட்டினார். .

'பயல் திமிர் பிடித்தவனாகவும் இருப்பான் போலிருக்கிறதே! என்று இப்போது அவர் மனம் தன்னைப்பற்றி நினைப்பதாகச் சத்தியமூர்த்திக்குத் தோன்றியது. ஆனால் வெளிப்படையாக ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் “ஏதேது உங்களிடம் பேசி ஒன்றும் மீதம் கொண்டுபோக முடியாது போலிருக்கே" என்றார் அவர். லேடி டைப்பிஸ்ட்டும், ரைட்டரும், தனக்கும் ஹெட்கிளார்க்குக்கும் நிகழ்ந்த இந்த விவாதத்தை அதுவரை சுவாரஸ்யமாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள் என்பதைச் சத்தியமூர்த்தி அப்போதுதான் திரும்பிப் பார்த்துத் தெரிந்து கொண்டான். தான் ஒபிடியன்ட்லி’ என்பதை அடித்துவிட்டு ட்ருலி' என்று எழுதிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/239&oldid=595299" இலிருந்து மீள்விக்கப்பட்டது