பக்கம்:பொன் விலங்கு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 243

'எதை வளர்க்கலாம்? எதை வளர்க்கலாம்? என்று யோசித்துப் பார்த்தபின் முடிவில் தன்னால் எதையுமே வளர்க்க முடியாதபடி உறுதியாகத் தெரிந்து கொண்டு தாடியையாவது வளர்க்கலாம் என்று வளர்க்கத் தொடங்கி விட்டார் போலிருக்கிறது. பெர்ஸனாலிட்டி இப்போ முன்னைவிடக் கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகியிருக்கு மேஜிக் செய்ய வருகிற நவீன மந்திரவாதி மாதிரி இப்போ முதலையைப் பார்த்தாலே பயமாயிருக்கு சார்...' என்று விமர்சனம் செய்து கொண்டிருந்தார் ஒரு விரிவுரையாளர். சத்தியமூர்த்திக்கும் இந்த விமர்சனத்தைக் கேட்டுச் சிரிப்பு வந்தது. அதே சமயத்தில் நாளைய சமூகத்தை நன்றாக உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள் இப்படி வம்பும் அரட்டையுமாகத் தனிமனிதனின் பலவீனங்களைப்பற்றி விமர்சனம் செய்து தங்கள் நேரத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்களே என்று வேறுவிதமாக மாற்றிச்சிந்தித்தபோது வேதனையாகவும் இருந்தது.

19

முற்போக்காகப் பேசுவதற்கும் செயலாற்றுவதற்கும் மனிதர்கள் கிடைக்காத குறையை விட முற்போக்காக நினைப்பதற்கே மனிதர்கள் கிடைக்காத குறைதான் பெரிய வறுமை செயலாற்று வதற்குச் சோம்பல் படுகிற மனிதர்களை விட நினைப்பதற்கே சோம்பல் படுகிற மனிதர்கள் தாம் அதிகம் இருக்கிறார்கள்.

米 மல்லிகைப் பந்தல் கல்லூரியின் சூழ்நிலைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எல்லாக் கல்லூரிகளிலும் உள்ள உறவு நிலை இப்படித்தான் இருக்கும்போலும் என்று

தோன்றியது அவனுக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/245&oldid=595313" இலிருந்து மீள்விக்கப்பட்டது