பக்கம்:பொன் விலங்கு.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 283

நாமே செய்து கொள்கிற ஓர் ஏற்பாடு. இப்படியெல்லாம் செய்து கொண்டால் ஒழிய இந்தக் காலத்தில் முன்னுக்கு வரவும் முடியாது. நீயே குழந்தைப் பெண். உனக்கு இதெல்லாம் புரியவும் புரியாது என்ன முத்தழகம்மாள்? நான் சொல்றது சரிதானே?' என்று அந்த அம்மாவையும் பேச்சில் இழுத்துத் தம்மோடு ஒத்துப் பாடச் சொன்னார் கண்ணாயிரம். ஆனால் மோகினி நிச்சயமாகவும், பிடிவாதமாகவும் தான் கூறிய வார்த்தைகளையே சாதித்தாள்.

'நாட்டியக் கலையில் நீங்கள் முன்னுக்கு வருவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார் யார் என்பதைச் சொல்ல முடியுமா?" என்ற கேள்வியைப் பேட்டி காண வந்திருந்த உதவியாசிரியர் கேட்டபோது, ஒருகணமும் தயங்காமல் தன் தாயின் பெயரையும் தனக்கு நாட்டியம் கற்பித்த ஆசிரியரின் பெயரையும் கூறினாள் மோகினி, ஆனால், முத்தழகம்மாளோ அதை உடனே மறுத்து, 'விளம்பர நிபுணர் கண்ணாயிரம் அவர்களும், கலைவள்ளல் மஞ்சள் பட்டி ஜமீன்தாரும் பலவகைகளில் ஒத்துழைத்து மோகினியை முன்னுக்குக் கொண்டு வந்தார்கள் என்று எழுதிக் கொள்ளுங்கள்" என்றாள். . .

"இந்தப் பொய் அடுக்கவே அடுக்காது. யார் பேரை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள். ஆனால் எனக்குக் கற்பித்த 'வாத்தியார் பேரை எழுதாவிட்டால் சும்மா விடமாட்டேன்" என்று மோகினி சீறி விழுந்த பின்பே அவர்கள் வழிக்கு வந்தார்கள். அதுவரை ஒரு நியாயத்துக்குக் கட்டுப்பட்டு ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்த குமரப்பன் தானும் அங்கு இருப்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறாற்போல், ஒரு கனைப்புக் கனைத்து விட்டுக் கண்ணாயிரத்திடம் கேட்கலானான்: * .

'எனக்கு ஒரு சிறிய சந்தேகம் சார் இந்தப் பேட்டியைக் குத்துவிளக்கில் வெளியிடும்போது, நாட்டிய நட்சத்திரம் மோகினியைப் பேட்டி கண்டு நமது நிருபர் அளிக்கும் பதில்கள் என்று வெளியிடுவீர்களோ அல்லது மோகினிக்காக அவளுடைய தாயையும் கண்ணாயிரம் அவர்களையும் பேட்டி கண்டு நமது நிருபர் அளிக்கும் பதில் என்று வெளியிடப் போகிறீர்களோ? நான் இரண்டாவதாகச் சொன்ன மாதிரிதான் வெளியிடப் போகிறீர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/285&oldid=595401" இலிருந்து மீள்விக்கப்பட்டது