பக்கம்:பொன் விலங்கு.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 பொன் ി.ു

இன் ப்யூட்டி என்று ஒர் ஆங்கிலக் கவிதையை விளக்கி வகுப்பு நடத்தினேன். அந்த விரிவுரை தத்ரூபமாகவும், அழகாகவும் வாய்த்துப் பலருடைய பாராட்டைப் பெற்றதற்குக் காரணமாக என் மனத்திற்குள் தூண்டுதலாக இருந்து பேசியவள் நீதான் மோகினி" என்றெல்லாம் விவரித்து அவளுக்கு ஒரு பதில் கடிதம் எழுத எண்ணினான் சத்தியமூர்த்தி. ஆனால் எப்படி எழுதுவது? மோகினியின் தாயிடமோ, கண்ணாயிரத்திடமோ அந்தக் கடிதம் சிக்கினால் என்ன ஆவது? என்ற தயக்கமும் வழக்கம்போல் தோன்றித் தடுத்தது. அன்று வெள்ளிக்கிழமையாதலால் மறுநாள் சனியும் அதற்கடுத்த நாள் ஞாயிறும் விடுமுறைகளாக இருப்பதை உத்தேசித்துத் தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசன் ஊருக்குப் போய் வருவதாகச் சொல்லிக் கொண்டு மூன்று மணிக்கே புறப்பட்டிருந்தார். கல்லூரி எல்லைக்குள்ளே முதல்வருக்கும் அவனுக்கும் காரசாரமாக விவாதம் நடந்ததைப் பார்த்து மருண்டுபோய் நமக்கேன் வம்பு? என்று விலகி நின்றுவிட்ட அதே ஆசிரியர்கள் எல்லாரும் கல்லூரிப் பாட வேளை முடிந்து காம்பவுண்டைக் கடந்து வெளியே வந்ததும் அவனருகே நெருங்கி வந்து பாராட்டினார்கள்.

'என்ன இருந்தாலும் நீர் பெரிய துணிச்சல்காரர் ஐயா! மதுரைக்காரரோ இல்லையோ? சும்மா விட்டுவிடுவீரா? இப்படி யாராவது புத்தி புகட்டினாலொழிய பிரின்ஸிபாலுக்குக் கொழுப்பு ஒடுங்காது! நாளையிலேயிருந்து கையெழுத்து மட்டுமே போட்டாலும்கூடப் போதும்' என்று முதலையே பணிந்து போகும்படி செய்து விட்டீரே ஐயா!' என்று சத்தியமூர்த்தியை நாசூக்காக கொம்பு சீவிவிட்டார் ஒரு பேராசிரியர்.

"யாரை ஆள்கிறோமோ அவர்களிடம்தான்அதிகம்பெருந்தன்மை காண்பிக்க வேண்டும் என்பது இந்த நூற்றாண்டின் இரகசியம் என்று ஒரு போடு போட்டீரே, அந்த இடத்தில் ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் முதலை அப்படியே அயர்ந்து போய்விட்டது" என்று புகழ்ந்தார் இன்னொருவர். -

"என்ன காரணத்தாலோ பிரின்ஸிபால் உங்களுக்கு அதிகமாகப் பயப்படுகிறாரே!” என்று மூக்கில் விரலை வைத்தார் வேறொருவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/300&oldid=595437" இலிருந்து மீள்விக்கப்பட்டது