பக்கம்:பொன் விலங்கு.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 பொன் விலங்கு

ஆட்படுகிற அன்புக்கு இணையான உறவு உலகத்தில் வேறெதுவும் இருக்க முடியாது என்று இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கிறபோது, "புஷ்ப மரத்தடியில் வீற்றிருக்கும் தெய்வத்துக்கு அர்ப்பணமாகும் பூவைப் போல் நான் தானாகவே உங்களுக்குச் சமர்ப்பணம் ஆனவள் என்றும் உங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வாத்தியம்

வாசிக்க நீங்கள் இல்லாமல் தூசி படிந்து போய் மூலையில்

கிடக்கிறது என்றும் தன்னுடைய கடிதத்தில் மோகினி எழுதியிருந்த உணர்ச்சிக்கரமான வாக்கியங்கள் அவனுக்கு ஞாபகம் வந்தன. சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தலில் மோகினியைப் பற்றி எண்ணி மனம் தவித்துக் கொண்டிருந்த தினத்திற்கு மறுதினம் காலையில் கண்ணாயிரமும் அம்மாவும் உடன் வரக் காரில் மதுரையிலிருந்து நாட்டரசன் கோட்டைக்குப் பக்கத்தில் பெரிய தனவணிகர்கள் நிறைந்த சிறிய ஊர் ஒன்றில் கலியாணத்திற்குச் சதிர்க் கச்சேரி: செய்யப் போய்க்கொண்டிருந்தாள் மோகினி. மாலையில் வரவேற்பின் போதுதான் சதிர்க் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது. ஆனாலும் காலையிலேயே புறப்பட்டுப் போய்விட வேண்டுமென்று அவசரப்படுத்திக் கண்ணாயிரம் அவர்களைக் காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டிருந்தார். கண்ணாயிரமே பெரிய புள்ளியை வீடுதேடி அழைத்து வந்து முன்பணம் கொடுக்கச் செய்து ஏற்பாடுபண்ணின கச்சேரியாயிற்றே? அதனால் அவரும் உடன் வந்தால்தான் கெளரவமாயிருக்கும் என்று அம்மா அவரையும் வற்புறுத்தி அழைத்துக் கொண்டு வருகிறாள் என்பது மோகினிக்குப் புரிந்தது. இம்மாதிரிப் பெரிய இடங்களில் நடைபெறும் எந்த வைபவ மானாலும் அதில் தானும் போய்த் தலையைக் காண்பித்து விட்டு வரவேண்டுமென்ற நைப்பாசை அல்லது அற்பத்தனம்கண்ணாயிரத்துக்கு உண்டு என்பதைமோகினி அறிவாள். - - படிப்படியாக இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டிருந்த காரணத்தினால் மோகினிக்குக் கண்ணாயிரத்தைப் பற்றி: நினைப்பதற்கே அருவருப்பாயிருந்தது. ஆனால் அவளுடைய அம்மாவுக்கோ எல்லாக் காரியங்களுக்கும் கண்ணாயிரம்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/306&oldid=595449" இலிருந்து மீள்விக்கப்பட்டது