பக்கம்:பொன் விலங்கு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

27

என் சாமர்த்தியங்கள். அவற்றை நான் படித்த கல்லூரியின் குழப்பங்களுக்கு இடையேயும் நான் தேடி அடைந்திருக்கிறேன் என்பதற்காக நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும்." -இப்போதும்கூடத் தன்னுடைய பதிலின் நயத்தையும் அழுத்தத்தையும் பாராட்டி மகிழ்வதுபோல் அந்தப் பெண்ணின் கண்களும் இதழ்களும் சிரித்ததைச் சத்தியமூர்த்தி கவனித்தான்.

சத்தியமூர்த்தியின் மறுமொழிகளைக் கேட்கக் கேட்கக் கல்லூரி அதிபர் பூபதிக்கு ஒரு தகுதி வாய்ந்த மனிதனைச் சந்தித்துக் கண்டுபிடித்துவிட்டோம் என்று அந்தரங்கமாகப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதை மறைத்துக்கொண்டே அவர் மேலும் வழக்கமான கேள்விகளைக் கேட்கலானார்.

"எம்.ஏ., பி.ஓ.எல். போன்ற பட்டங்களைப் பெறுகிறவர்களைவிடப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் ஒரே ஆசிரியரிடம் நிகண்டு முதல் தொல்காப்பியம்வரை பாடம் கேட்டுத் தேர்ந்த தமிழ்ச்சங்கப் பண்டிதர்களும், புலவர்களும், வித்துவான்களும் தமிழை ஆழமாகப் படித்தவர்களாயிருக்கிறார்களே? கல்லூரிப் பாடங்களோடு தமிழையும் சேர்த்துப் படிக்கிறவர்கள் தமிழிலும் தேறுவதில்லை; ஆங்கிலத்திலும் சுமாராயிருக்கிறார்கள். பல்கலைக் கழக விதிகள் மட்டும் கண்டிப்பாயிராத பட்சத்தில் நான் என்ன செய்வேன் தெரியுமா? உங்களை இண்டர்வ்யூவுக்கு அழைத்திருக்கும் இதே வேலைக்குப் பழைய முறைப்படி ஆழமாகக் கற்ற ஒரு புலவரை அழைத்து நியமனம் செய்து விடுவேன்."

"இப்போதுகூட ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. அப்படி செய்ய இடமிருந்தால் - அப்படித்தான் செய்ய வேண்டுமென்று நீங்கள் கருதினால் எனக்கு இந்த வேலையைத் தரவேண்டாம். ஆனால் நீங்கள் சொல்லியதில் ஒன்றை மட்டும், நான் ஒப்புக்கொள்ளமுடியாது. பெரும்பாலோரை வைத்துத் தீர்மானம் செய்யப்படுகிற முடிவுகளையே நீங்கள் எல்லோரோடும் சார்த்திப் பேசவிடமாட்டேன். பெரும்பான்மை முடிவுகள் சிறுபான்மையினரின் தகுதியைப் பாதிக்கும். என்னைப் பொறுத்தவரை கல்லூரிப்பாடங்களுக்கு மேலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/31&oldid=1406596" இலிருந்து மீள்விக்கப்பட்டது