பக்கம்:பொன் விலங்கு.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 பொன் விலங்கு

"இதில் நான் தலையிட்டுத்தீரவேண்டியிருப்பதற்காக என்னை மன்னியுங்கள் சார் இந்தப் பையனுடைய அறைக்குக் கவுண்டர் லாக் போட்டுப் பூட்டுவதற்கும். இருபத்தைந்து ரூபாய் தண்டம் கொடுப்பதற்கும் இவன் ஒரு தவறும் செய்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மலைக்காட்டு ஊரில் தகப்பனைப் புலி அடித்துக் கொன்று போட்டு விட்டதாகத் தகவல் தெரிந்து ஊருக்குப் போயிருக்கிறான். அந்த நிலையிலும் உங்களைத் தேடி வந்து சொல்லிவிட்டுப் போகத்தான் முயன்றிருக்கிறான் இவன். நீங்கள் வீட்டோடு பூட்டிக்கொண்டு இரண்டாவது ஆட்டம் திரைப் படத்துக்குப் போய்விட்டீர்கள். அப்புறம் என்னைத் தேடி வந்து சொல்லிக் கொண்டுதான் இவன் ஊருக்குப் போயிருக்கிறான். இவனுக்கு நேர்ந்திருக்கிற கொடுமைக்கு இவன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமலே விடுதியிலிருந்து புறப்பட்டுப் போயிருந்தாலும் நீங்களும் நானும் அதை மன்னிக்கத் தயாராயிருக்க வேண்டும் என்பது என் கருத்து. உங்களிடம் சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருப்பதற்கு நான் விரும்பவில்லை. இந்தப் பையனுடைய அறைக் கதவைத் திறந்துவிடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். இல்லாவிட்டால் நான் கல்லூரி நிர்வாகியைப் பார்த்து இதைப் பற்றி விவாதிக்க நேரிடும்" என்று கூறிவிட்டு அவருடைய பதிலை எதிர்பார்க்காமலே வெளியேறினான் சத்தியமூர்த்தி. வார்டனின் வீட்டு வாசலிலிருந்தே அந்த மாணவனுக்கு விவரம் சொல்லி அனுப்பினான் அவன். 'தம்பி! நீ உன்னுடைய அறை வாயிலில் போய்க் காத்திரு. இரவு எட்டு மணிக்குள் கவுண்டர் லாக்' எடுக்கப் பெற்று அறைக் கதவைத் திறக்க வழி உண்டா இல்லையா என்று பார். முடியவில்லையானால் எட்டரை மணிக்கு என்னை அறையில் வந்து பார். உன்னை நான் கல்லூரி நிர்வாகியிடம் அழைத்துக்கொண்டு போகிறேன்." - -

ஏழே முக்கால் மணிக்கு அந்த மாணவன் வந்து தன்னுடைய அறைக் கதவு திறந்துவிடப் பெற்றதாகச் சொல்லிச் சத்தியமூர்த்திக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/318&oldid=595473" இலிருந்து மீள்விக்கப்பட்டது