பக்கம்:பொன் விலங்கு.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பொன் விலங்கு

நீங்காத சூழலில் அந்தப் பூக்களின் வாசனையை நுகர்கிற முதல் மனிதனாக அதைக் கடந்து மேலே நடந்து தெருவுக்குள் போவதற்கு முன்பாகச் சத்தியமூர்த்தி ஒருகணம் அந்த இடத்தில் தயங்கி நிற்பது வழக்கம்.

அந்த இடத்தில் நின்றால் நேர் எதிர் பக்கம் வெள்ளி உருகி மின்னுகிறதோ என ஏரிக்கு அப்பால் தெரியும் மலை முகட்டில் ஒர் அருவி மலையே சிரித்துக் கொண்டிருப்பது போல் தோன்றும். அந்த அருவியைப் பார்த்து வியந்து கொண்டே மலைநகைத்தனைய வெள்ளருவி என்று பாடப்பட்டிருக்கும் அழகிய இலக்கியத் தொடரையும் நினைத்துக்கொண்டு மேலே செல்வது அவன் வழக்கம். அந்தக் கொடிமல்லிகைப் பூக்களின் வாசனையில் தயங்கி நிற்கும்போது, சில வாரங்களுக்கு முன்பு சங்கீத விநாயகர் கோயில் தெருவின் அந்தச் சின்னஞ் சிறு வீட்டில் முருகன் படத்திலிருந்து தவறிக் கழுத்தில் விழுந்த மல்லிகைப் பூமாலையும் அந்த மாலையோடு மாலையாகச் சேர்த்துத் தோள்களைப் பற்றிய கைகளும் அவற்றின் நறுமணமும் சத்தியமூர்த்தியின் நினைவில் தோன்றி நிறைவது உண்டு. அந்தப் பூக்களின் வாசனையை நினைக்கும்போது அவனால் மோகினியையும் சேர்த்து நினைக் காமல் இருக்க முடியாது.

அன்றிரவு பாக்கு மரங்கள் பூத்து மணக்கும் வீதி வழியே இரவுச் சாப்பாட்டுக்காக உணவு விடுதிக்குச் சென்ற போதும், அதே வழியாகத் திரும்பி வந்தபோதும், அவன் நினைவுகளை மோகினியே ஆண்டு கொண்டிருந்தாள். அறைக்குத் திரும்பியதும் மேஜை விளக்கைப் போட்டு டிராயரிலிருந்து அந்தப் புகைப்படங்களை எடுத்துப் பார்த்தான் அவன். நீலப்பட்டுப் போர்த்த மேஜை விளக்கின் அடங்கிய மெல்லொளியில் உயிருள்ள மோகினியே கலீவரின் யாத்திரையில் வருகிற சிற்றுருவம் ப்ோலத் தத்ரூபமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள். -

மந்த மாருத நடையிற்-சிந்தும் நகையெடு சிவந்த இதழ்கள்என்ற நவநீத கவியின் பாடல் ஒன்று ஆரம்பமாகும். அந்தப் பாடலின் பெயர் 'கன்னிமைக் கனவுகள் என்பது. அந்தப் பாடல் வரியையும் நினைத்துப் படத்தில் சிரித்துக் கொண்டிருக்கிற மோகினியையும் பார்த்தான் சத்தியமூர்த்தி, அந்த நிலையில் பதிலுக்குத் தானும் சிரிக்க வேண்டும் போலப் பாவித்துக்கொண்ட காரணத்தால் அப்போது அவன் இதழ்களும் அந்தப் படத்தை நோக்கி மலர்ந்தன. மறுநாள் காலையில் கல்லூரி வகுப்புகளில் செய்ய வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/330&oldid=595501" இலிருந்து மீள்விக்கப்பட்டது