பக்கம்:பொன் விலங்கு.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

来源 - பிழையாகவே நினைத்துப் பிழை யாகவே அனுமானமும் செய்து பிழை யாகவே பேசுகிறவர்கள் பத்துப் பேர் ஒன்று சேர்ந்துவிட்டால் அப்புறம்

சொர்க்கத்தைக் கூட நரகமாக மாற்றி விடலாம். -

※ காலநடையினிலே உன்தன் காதல் தெரியுதடி என்ற கவிதைத் தொடரிலே காலநடை என்ற பதச் சேர்க்கையை இணைத்துப் புனைந்ததற்காக மகாகவி பாரதியாரைப் பலமுறை மனத்தில் நினைத்து நினைத்துக் கொண்டாடியிருக்கிறான் சத்தியமூர்த்தி. அன்று அதிகாலையில் மோகினியின் ஞாபகத்தை அடியொற்றினாற் போல் இந்தக் கவித் தொடரும் நினைவு வந்தது அவனுக்கு. காப்பி குடிப்பதற்காகச் சிற்றுண்டிச் சாலைக்குள் நுழைந்தது, காப்பி குடித்துவிட்டுத் திரும்பியது எல்லாமே தன் நினைவோ, ஞாபகமோ இல்லாமல் மிகமிக அவசரமாக நடந்து விட்டதைப்போல் தோன்றின. அப்போது அவனுடைய ஞாபகத்தின் பரப்பை எல்லாம் மோகினி ஒருத்தியே முழுமையாக ஆண்டு கொண்டிருந்ததனால், காரியமாகச் செய்து கொண்டிருந்த எதுவும் நினைவாக ஞாபகத்தில் நிற்கவில்லை. காப்பி குடித்துவிட்டுத் திரும்பிவந்து கொண்டிருந்தவன் வழியில் அங்கங்கே தனித் தனியாகவும், இருவர், மூவர் இணைந்து கூட்டாகவும், சந்தித்த மாணவர்களின் வணக்கங்களையும், மலர்ந்த முகங்களையும் பார்த்துப் பதிலுக்கு இயந்திரம் போல் வணங்கிவிட்டு மேலே நடந்து கொண்டிருந்தான். அன்று அதிகாலையில் மல்லிகைப் பந்தல் நகரம் அழகுமயமாக இருந்தது. பன்னீர் தெளிப்பதுபோல் சாரல் விட்டுவிட்டுப் பெய்து கொண்டிருந்த சூழ்நிலையில் கூலிங்கிளாஸ் அணிந்து கொள்ளாமலிருக்கும்போதே கூலிங்கிளாஸி'ல் தெரிவதைப்போல் ஊர் குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் இருந்தது. நான்கு பக்கமும் கருநீல மேகங்கள் கற்றை கற்றையாகச் சுருட்டிக் கொண்டு மலை முகடுகளில் வந்து சரிந்துவிடப் போவதைப்போல் தொங்கிக்கொண்டிருந்தன. இயல்பாகவே எழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/344&oldid=595530" இலிருந்து மீள்விக்கப்பட்டது