பக்கம்:பொன் விலங்கு.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - S47

முகத்தோடு எதிர் நின்று வணங்குவதையும் மற்றவர்கள் எப்படிப் புரிந்துகொள்ள முடியும் என்று அந்தச் சில நிகழ்ச்சிகளிலிருந்து அவன் தெரிந்து கொண்டிருந்தான். முதன் முதலாக அங்கு வேலை ஒப்புக் கொள்வதற்கு முந்திய நாள் இரவு அவன் அந்த ஊர் பஸ் நிலையத்தில் வந்து இறங்கிப் பெட்டிப் படுக்கையோடு தங்க இடமின்றித் தவித்த போது, பாரதி காரில் வந்து அழைத்துப் போய்க் கல்லூரியில் அவன்தங்குவதற்குஇடம் ஏற்பாடுசெய்துகொடுத்தாளே, அதைப் பற்றியே கல்லூரி முதல்வரும் ஹெட்கிளார்க்கும் இல்லாத வம்புகளையெல்லாம் பரப்பியிருந்தார்கள். அவன் எப்படி யாரால் அங்கே அழைக்கப் பெற்று வந்து தங்கச் செய்யப்பட்டான் என்பதை அறிந்து மறுநாள் காலை அவர்கள்"ஒருதினுசாகச்சிரித்துக்கொண்டே பேசியதுகூட அவனை வேதனைக்குள்ளாக்கியிருந்தது. அவன் செவிகளில் கேட்காதென நினைத்து அன்று முதல் வரும் ஹெட்கிளார்க்கும் தங்களுக்குள் பேசிக்கொண்டு போன உரையாடலையும் அவன் அரைகுறையாகக் கேட்டு மனம் வெந்து போயிருந்தான். - - -

'மனிதன் இண்டர்வ்யூ நடத்துகிற மாதிரியா நடத்தினாரு? வீட்டிலே கூப்பிட்டு வைத்துக்கொண்டு மகளையே தேநீர் கலந்து கொண்டு வரச்சொல்லி-விருந்து-உபசாரமெல்லாம் பண்ணிச் "சுயம்வரம் நடத்தற மாதிரி நடத்தினார். பையன் அப்பாவும் மகளும் சேர்ந்து இரசிக்கிறாப்பிலே நல்ல காதல் கவிதையாகத் தேடிப் பிடிச்சுப் பாடம் நடத்தினான். உடனே ஆகா ஊகூ'ன்னு எல்லாரையும் வச்சுக்கிட்டே தலைமேலே தூக்கிப் பேசிக் கொண்டாடினாரு... இனிமேல் மகள் அதுக்கு மேலே கொண்டாடுவா போலிருக்கு... அவன் இந்த ஊர்லே காலை வைக்கிறதுக்கு முன்னாலே காரிலே போய்த் தேடி அழைச்சிட்டு வந்து தங்க ஏற்பாடெல்லாம் பிரமாதமாகப் பண்ணிக் கொடுத்திருக்கா - உமக்கும் எனக்கும் நடக்குமா ஐயா இந்த உபசாரம்...?'- இப்படிப் பேசியது கல்லூரி முதல்வர். இதைக் கேட்டுவிட்டு, 'பார்க்கலாம்? பார்க்கலாம் இதெல்லாம் எங்கே போய் நிற்குதுன்னுதான் பார்க்கலாமே?" என்று பதில் கூறியவர் ஹெட்கிளார்க், தனக்குத்தானே இரண்டாம் தடவையாக மறுபடி நினைத்துப் பார்க்கவும் விரும்பாத இந்தப் பழைய உரையாடலை சத்தியமூர்த்தி இன்னும் மறந்து போய்விடவில்லை. யாரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/349&oldid=595540" இலிருந்து மீள்விக்கப்பட்டது