பக்கம்:பொன் விலங்கு.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 பொன் விலங்கு

மேலே உள்ளவர்களைத் தன்னைக்கட்டிக் கொள்வதற்காகவே நான் உங்களுக்கு மட்டும் அதிக சிரத்தையோடு சொல்லிக் கொடுக்கிறேன் என்றும், மற்ற மாணவர்களைக் கவனிப்பதில்லை என்றும் எனக்குக் கெட்ட பெயர் வரும். என்னிடம் மட்டுமே இவ்வளவு மதிப்பும் ஆர்வமும் காண்பித்துவிட்டு மற்ற ஆசிரியர்களைக் கவனிக்காதது போல் இருந்தால் உங்களுக்கும் அதனால் கெட்ட பெயர் வரும்."

"தாராளமாக வரட்டுமே? உங்களை மதிப்பதனால் வருகிற கெட்டபெயர் எவ்வளவு பெரிதாயிருந்தாலும் நான் அதைத் தாங்கிக் கொள்வதற்குத் தயார். சிறந்த ஆசிரியர் என்ற முறையில் என்னைப்போல் ஒரு மாணவி உங்களை மதிப்பதோ உங்களிடம் ஆர்வம் காண்பிப்பதோ எப்படிப் பிழையாகும்?' என்று ஆத்திரமாகவும் தைரியமாகவும் அப்போது அவனை எதிர்த்துக் கேட்டாள் பாரதி. அவளுடைய அறியாமையையும் வெகுளித் தனத்தையும் பார்த்துச் சத்தியமூர்த்தி சிரித்தான்.

'உங்கள் கேள்வி நியாயமானது! ஆனால் பிழையாகவே நினைத்துப் பிழையாகவே அநுமானம் செய்து பிழையாகப் பேசுகிறவர்கள் பத்துப்பேர் ஒன்று சேர்ந்தால் சொர்க்கத்தைக்கூட நரகமாக மாற்றி விடலாம். அதைத் தெரிந்து கொண்டு ஒருவருக் கொருவர் அளவாகப் பழகவேண்டும். சுருக்கமாக ஒன்று சொல்வேன். நீங்கள் நினைப்பதுபோல் மென்மையாகப் பழகவே தெரியாத அளவு நான் கடுமையானவன் இல்லை. நம்முடைய சமூகப் பொறுப்பைக் காப்பாற்றிக்கொள்வதற்காகச் சில இடங்களில் நாம் மலரவோ சிரிக்கவோ கூட முடியாமல் போய் விடுகிறது"இதைக் கூறிவிட்டு அவளிடம் விடைபெற்றுக்கொண்டு மாடிப்படி ஏறியபோது தான் சொல்ல வேண்டியதை மிக நாசூக்காக சொல்லி விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி.

இண்டர்ல்யூக்கு வந்து திரும்பிய போதும், அவளுடைய கடிதங்கள் மதுரையில் தனக்குக் கிடைத்த போதும், மல்லிகைப் பந்தலுக்கு தான் வந்து சேர்ந்த முதல் தினத்தன்று அவளே தன் அறையைத் தேடிக் காப்பி எடுத்துக்கொண்டு வந்தபோதும், அவளைப்பற்றி அவன் மனத்தில் இருந்த சிறிதளவு நளின

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/352&oldid=595548" இலிருந்து மீள்விக்கப்பட்டது