பக்கம்:பொன் விலங்கு.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.68 பொன் விலங்கு

முடிவு வெளியாகும். விடிந்ததும் வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பிவிடலாம்" எனக் கூறி மருண்டார் ஜார்ஜ்.

"இதிலென்ன பயம் வந்தது? வாக்குச் சீட்டுகளை எண்ணிப் பார்த்து உண்மை முடிவை அறிவிக்கிறோம் நாம். நம்மை யார் எதற்காகப் பழி சொல்ல முடியும்?" என்றான்சத்தியமூர்த்தி. அதைக் கேட்ட பின்பும் ஜார்ஜ் பயந்து தயங்கத்தான் செய்தார்.

"உங்களுக்குத் தயக்கமாக இருந்தால் நான் வெளியே போய் தேர்தல் முடிவை அறிவிக்கிறேன் மிஸ்டர் ஜார்ஜ்' என்று கையில் இரண்டு அபேட்சகர்களுடைய மொத்த வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கைத் தொகையையும் எழுதிய காகிதத்துடன் நூல் நிலையக் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் சத்தியமூர்த்தி. அவன் வெளியே வந்ததும் அங்கு நிலவிய சந்தைக் கடை இரைச்சல் போன்ற கூப்பாடுகளும், மாணவ மாணவிகளின் பேச்சுக் குரல்களும் அடங்கி எல்லார் முகங்களும் அவனையே நோக்கின. எல்லார் செவிகளும் அவன் கூறப்போகும் சொற்களுக்காகத்தாகத்தோடு காத்திருந்தன. புலிகோவிந்தனுடைய ஒரு கை வலது பக்கத்து மீசை நுனியிலிருந்தது. பாரதி மட்டும் த்ன்லயைக் குனிந்து கீழே தரையைப் பார்க்கத் தொடங்கியிருந்தாள். "மிஸ் பாரதி'...என்று பேரைப் படித்துவிட்டு அவளுடைய மொத்தவோட்டுகளின் எண்ணிக்கையையும் படித்து அவள் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு புலி கோவிந்தனின் மொத்த வாக்குகளையும் கூறி, அவற்றைவிடப் பாரதிக்கு எவ்வளவு வோட்டுகள் அதிகம் என்பதையும் அவன் சொல்லி முடிப்பதற் குள்ளேயே பாரதியோடிருந்த பெண்களின் வெற்றி ஆரவாரமும், புலி கோவிந்தனோடிருந்த ஆண்களின் முரட்டுக் கூக்குரல்களும் ஒலிக்கத் தொடங்கி விட்டன. ஸ்கூட்டர் பஞ்சராகிவிட்டதுடீ என்று ஒரு குறும்புக்காரப் பெண் கூச்சலிட, அதைக் கேட்டு ஆத்திரமடைந்த புலி கோவிந்தனின் தோழன் ஒருவன் கீழே கிடந்த சரளைக் கல் ஒன்றை எடுத்து அந்தப் பெண்ணின்மேல் வீசுவதற்குக் குறி பார்த்தான்.

"எங்கே எறியுங்கள் மிஸ்டர் நீங்கள் மட்டும் என்மேல் இந்தக் கல்லை எறிந்துவிடுங்கள் பார்க்கலாம்' என்று அந்தப் பெண் முன்னால் ஓடிவந்து அசட்டுத் துணிவோடு நின்றாள். சத்தியமூர்த்தி ஒடிப்போய் அந்தப் பையனின் கையில் இருந்த கல்லைப் பறித்து எறிந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/370&oldid=595588" இலிருந்து மீள்விக்கப்பட்டது