பக்கம்:பொன் விலங்கு.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 பொன் விலங்கு

உபயோகத்துக்காக ஒரு ஹீட்டர் வாங்கிக் கொள்ளுங்கள் சுந்தரேசன்! எனக்கு இப்போது அவசரமில்லை" என்று வாயினால் நாகரிகமாகப் பதில் சொல்லித் தன் வறுமையை மறைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. -

அறைக்குத் திரும்பிப் போய்ச் சேர்ந்தபோது சத்தியமூர்த்திக்காக அவனே முற்றிலும் எதிர்பாராத ஆச்சரியம் அங்கே காத்திருந்தது. மாடிப்படி ஏறுகிற வழியில் ராயல் பேக்கரி வாசல் வராந்தாவில் பெட்டி-பை-ஹோல்டால் சகிதம் குமரப்பன் வந்து காத்துக் கொண்டிருந்தான். பிரயாணத்தினால் தலை முன் நெற்றியில் வ்ந்து கத்தி நுனியாகச் சரிந்திருந்த 'கிராப் அந்த முகத்தின் குறும்புத்தனத்தை அதிகமாக்கிக் காண்பித்துக் கொண்டிருந்தது.

"என்னப்பா இது சொல்லாமல் கொள்ளாமல் நடு இரவில் திடுதிப்பென்று வந்து சேர்ந்திருக்கிறாய்? குத்துவிளக்கில் வெளியாகும் கார்ட்டூன்களும் நகைச்சுவைப் படங்களும்தான் வியப்பும் அதிர்ச்சியும் தரக் கூடியவைகளாயிருக்குமென்றால் அவைகளை வரைகிறவருடைய காரியங்கள் அவற்றைவிட அதிர்ச்சி தரக் கூடியவைகளாயிருக்கிறதே?' என்று சத்தியமூர்த்தி வினாவவும் "மல்லிகைப் பந்தலையும் உன்னையும் தேடிக்கொண்டு வருகிறவர்கள் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று புறப்பட்டு வரக்கூடாது என்று யாராவது நிபந்தனை விதித்திருக்கிறார்களா சத்தியம்? ஏதோ தோன்றியது. மூட்டையைக் கட்டிக்கொண்டு புறப்பட்டு வந்துவிட்டேன். இப்படித் திடீரென்று வரக் கூடாதென்று நீ கருதுவதாக இருந்தால் காலையில் முதல் பஸ்ஸுக்குத் திரும்பிப் போய் விடட்டுமா?"

அந்த அர்த்த ராத்திரி வேளையிலும் தன்னுடைய இயற்கைக் குணமான குறும்பும் கேலியும் சிறிதுகூடக் குறையாமல் நான்தான் குமரப்பன் வந்திருக்கிறேன் என்று தான் வந்திருப்பதைத் தன் பேச்சினாலும், சிரிப்பினாலுமே நிரூபித்துக் கொண்டு நின்றான் குமரப்பன். சுந்தரேசனுக்கும் குமரப்பனுக்கும் அறிமுகம் செய்து வைத்தான் சத்தியமூர்த்தி. 'பாடனி படித்தவரா? ரொம்பப் பொருத்தமான ஊருக்குத்தான் வந்திருக்கிறீர்கள். ஒன்றும் பொழுது போகவில்லையானால் ஏதாவது இலையைக் கிள்ளியோ, செடியை முறித்தோ ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கலாம். இலைகளுக்கும் செடிகளுக்கும் பஞ்சமில்லாத ஊராச்சே இது" என்று சந்தித்த முதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/378&oldid=595604" இலிருந்து மீள்விக்கப்பட்டது