பக்கம்:பொன் விலங்கு.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- நா.பார்த்தசாரதி 379

"நீ என்னுடன் ஒரு மணி நேரம் தனியாக வெளியில் உலாவ வருவதற்குத் தயாராயிருந்தால் எல்லாவற்றையும் சொல்கிறேன். சொல்வதற்கு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் உன்னைப் போல் ஓர் உண்மை நண்பனிடம் எல்லாவற்றையும் மறக்காமல் சொல்லியும் ஆக வேண்டும். நான் எதைச் சொல்லப்போகிறேனோ அதில் நீ கவலைப்படுவதற்கும் ஒன்றுமில்லை; நான் கவலைப் படுவதற்கும் ஒன்றுமில்லை; தனக்காகத் தான் கவலைப்படுவதே அவமானம் என்று எண்ணும் உண்மைத் தைரியசாலி ஒருவன் தனக்கு அநுதாபப்படுவதாகப் பிறர் கவலைப்படுவதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?' என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் குமரப்பன். அவசரமாக பல்விளக்கி நீராடி முடித்துக் கொண்டு நண்பனுடைய வேண்டுகோளை மறுக்காமல் அவனோடு உலாவச் சென்றான் சத்தியமூர்த்தி. பக்கத்து உணவு விடுதியில் காலைக் காப்பி சிற்றுண்டியை முடித்துக்கொண்டு புறப்பட்டார்கள் நண்பர்கள். சிறிது தொலைவுவரை மெளனமாக நடந்து பின்பு குமரப்பன் தானாகவே பேச்சை ஆரம்பித்தான். -

'குத்து விளக்கில் வருகிற வாரம் என்ன கார்டுன் வரும் என்று நேற்றிரவு நீ என்னைக் கேட்டாயல்லவா? கொந்தளிக்கும் கடலில் ஒரு சிறு படகு தத்தளிப்பதாகவும் அந்தப் படகின் நடுவே ஒரு குத்துவிளக்கு காற்றில் ஆடியசைந்து அவிவதாகவும் வரைந்து, கொந்தளிப்பின் மேல் ஊழல் என்றும் படகின் மேல் தரமின்மை என்றும் எழுதி நிர்வாகியின் மேஜைமேல் கொண்டுபோய் எறிந்தேன். திரும்பிப்பாராமல் வந்துவிட்டேன். கடந்த ஒரு வார்த்திற்குள் அந்தப் பத்திரிகையின் நிர்வாகம் உரிமை எல்லாம் கைமாறி மஞ்சள்பட்டி ஜமீன்தாரிடம் போய்விட்டது. அவரும் கண்ணாயிரமும் அடிக்கடிகாரியாலயத்துக்கு வந்து எல்லாரையும்

வாயில் வந்தபடி பேசி மிரட்டுகிறார்கள்.

"கணக்கு வழக்குகளைப் புரட்டிப் பார்த்தபோது, காரியாலயத்தில் யார் யாருக்கு என்ன சம்பளம் என்று விசாரித்த ஜமீன்தார், என் சம்பளத்தைப் பற்றிக் கேட்டதும், என்ன ஆச்சரியம்? அப்படியும் இப்படியுமா இரண்டு கோட்டை இழுத்துப் பொம்மை போடறவனுக்கு இவ்வளவு சம்பளமா?ன்னு கேட்டாராம். அதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/381&oldid=595612" இலிருந்து மீள்விக்கப்பட்டது