பக்கம்:பொன் விலங்கு.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 பொன் விலங்கு

"எனக்குக் குறள் எல்லாம் தெரியாது அப்பனே. அதெல்லாம் சொல்வதற்குத்தான் நீ இருக்கிறாயே! குறள் படித்தால் மட்டும் போதுமா? உன் தகப்பனார் கூடக் குறள் படித்திருக்கிறார். எத்தனையோ ஆண்டுகள் ஆசிரியராக இருந்து குறளை மாணவர்களுக்குச் சொல்லியும் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவ்வளவு பெரிய மதுரையில் மஞ்சள்பட்டியாரையும், கண்ணாயிரத்தையும்தான்-அவரால் பெரிய மனிதர்களாக மதிக்க முடிகிறது. உன்னாலும் என்னாலும் அப்படி மதிக்க முடியவில்லையே! அது ஏன்?"- என்று குமரப்பன் கேட்டபோது முதல்நாள் தந்தையின் கடிதத்தைப் படித்த சமயத்தில் இதே விஷயத்தைத் தானும் சிந்தித்ததைப் பற்றி நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. அவர்கள் இரண்டு பேருடைய சிந்தனையும் இந்த விஷயத்தில் ஒன்றாயிருந்தது.

'உங்கள் தெருப் பக்கமாக ஒருநாள் போயிருந்தேனடா சத்தியம்! உங்கள் வீட்டு மாடியை இடித்துக் கட்டுகிறார்கள் போலிருக்கிறது. மராமத்து வேலைகள் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். கண்ணாயிரத்தோடு காரில் உன் தந்தையையும் இரண்டு மூன்று முறை வேறு வேறு இடங்களில் பார்த்தேன். மற்றொரு நாள் ஜமீன்தாரோடுகூடப் பார்த்தேன். பாவம் அலைகிறார்' என்று குமரப்பன் மேலும் தந்தையைப் பற்றிக் கூறியபோது தன் தந்தை அந்தத் தீயவர்களையெல்லாம் அண்டிக் கொண்டிருப்பதை நினைக்கவும் வெட்கமாக இருந்தது சத்தியமூர்த்திக்கு. செளகரிய அசெளகரியங்கள் பெரிய தளைகளாக இருந்து வாழ்க்கையில் நல்லவர்கள் நல்லவர்களோடு இணைய முடியாமலும், கெட்டவர் களும் நல்லவர்களும் கலந்தோ சம்பந்தப்பட்டோ தவிக்க நேரிடுவதையும் அவன் அப்போது தன் சிந்தனையில் பொறுத்துக் கொண்டேதீர்வதற்குப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. நண்பர்கள் இருவரும் அறைக்குத் திரும்பும்போது சத்தியமூர்த்தி கல்லூரிக்குப் புறப்பட நேரமாகியிருந்தது. குமரப்பன் திடீரென்று வந்ததினால் ஏற்பட்ட திகைப்போ, அல்லது அவன் குத்துவிளக்கு வேலையை உதறிவிட்டதனால் விளைந்த வருத்தமோ எதுவும் இல்லாமல் சினேகத்துக்கு அந்தரங்கமான உண்மை நண்பன் வந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சி ஒன்று மட்டுமே நிலவும் மனத்தோடுதான் அறைச் சாவியை அவனிடம் கொடுத்துவிட்டுக் கல்லூரிக்குப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி. சுந்தரேசன் அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/384&oldid=595618" இலிருந்து மீள்விக்கப்பட்டது