பக்கம்:பொன் விலங்கு.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 பொன் விலங்கு

போவார்கள். சொன்னபடி கேட்க மாட்டார்கள்" என்று அக்கறையில்லாமல் பேசினார் அந்தப் பேராசிரியர். சோஷல் சர்வீஸ்' என்ற பகுதியில் நாட்டுப்புறத்து ஊர்களுக்குச் சென்று அரசியல் இலக்கியம் சமுதாயம் பற்றிய கருத்துகளை விளக்கிக்கூறுவதாகப் பிரிக்கப்பட்டுள்ளசெமினார்.காம்ப் என்பது காரியரீதியாக எதையும் சாதிக்காத வீண் முயற்சியாக இருப்பதைப் பல கல்லூரிகளில் பார்த்திருந்த சத்தியமூர்த்தி தன்னுடைய கல்லூரியிலாவது நடப்பு ஆண்டுக்குள் மூன்று நான்கு ஒர்க் காம்ப் அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டான். வயது முதிர்ந்த அந்தப் பேராசிரியரோ சோஷல் சர்வீஸ்' என்ற பெயரில் மாணவர்களை அழைத்துக்கொண்டு அழுக்குப் படாமல் உல்லாசப் பயணம் போய்விட்டு வர ஆசைப்பட்டார்.உண்மையில் மாணவர்கள்'செமினார்காம்ப்பை விட 'ஒர்க்காம்ப்"பில் ஆர்வம்காட்டினார்கள்.உடம்பினால் மட்டும் முதுமை யடைகிறவர்களையாவது மன்னிக்கலாம். மனத்தினாலும் முதுமை அடைந்து தளர்ந்து விடுகிறவர்களை மன்னிக்கவே முடியாது. இந்தப் பேராசிரியர் மனத்தினாலும் மூத்துத்தளர்ந்துபோயிருந்தார். இவரைக் கலந்தாலோசிப்பதில் பயனில்லை என்று மாணவ மாணவிகளிடம் காலாண்டு விடுமுறையில் ஒர்க்காம்ப்புக்குப் பெயர் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துச் சுற்றறிக்கை அனுப்பினான் சத்தியமூர்த்தி. இந்த மனிதரிடம் ஏற்பட்டாற் போன்ற இதே சலிப்பான அநுபவம் ஒன்று மறுநாள் மாலை வார்டனிடம் அவனுக்கு ஏற்பட்டது. நீண்ட நாட்களாக ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டிருக்கிற பலர் செய்கிற தொழிலிலும், வாழ்கிற வாழ்க்கையிலும் சலிப்படைந்து திருப்தியற்றிருப்பதை இந்தச்சம்பவங்கள் அவனுக்குப் படிப்படியாக விளக்கின. மறுநாள்மாலை வார்டனுக்கும் சத்தியமூர்த்திக்கும் தர்க்கம் நிகழக் காரணமாயிருந்த அந்த விஷயம் மிகவும் முக்கியமானது.

காலாண்டுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் இரவு எட்டு மணிக்கு மேல் மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறுவது கண்டிப்பாகத் தடுக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு மாணவனுடைய அறையிலும் வீண் அரட்டைக் குரலோ பேச்சுக் குரலோ இருக்கலாகாது. விளக்கைப் போட்டுக் கொண்டு ஜன்னல்களைத் திறந்து வைத்துப் படிக்க வேண்டும். சிலர் விளக்கைப் போட்டுக் கொண்டு தூங்கிவிடுவதும் உண்டாகையினால் துங்குகிறார்களா விழித்திருந்து படிக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்காக ஜன்னலையும் திறந்து வைத்திருக்க வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/402&oldid=595644" இலிருந்து மீள்விக்கப்பட்டது