பக்கம்:பொன் விலங்கு.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 பொன் விலங்கு

"பஸ் ஒன்றும் தாமதமாகவில்லை.பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நேரே எர்ஸ்கின் ஆஸ்பத்திரிக்குப் போய் ஒருத்தரைப் பார்க்க வேண்டியிருந்தது. அதனால் நேரமாகிவிட்டது' என்று சுபாவமாகப் பதில் சொன்னான் சத்தியமூர்த்தி,

'அடடே ஜமீன்தாரைப் பார்ப்பதற்காகக் கண்ணாயிரம் இன்றைக்கு என்னைக்கூட எர்ஸ்கின் ஆஸ்பத்திரிக்குத்தான் வரச் சொல்லியிருக்கிறார். ஏதோ குளுகோஸ் டப்பா அது இது என்று சாமான் எல்லாம் வாங்கிக்கொண்டு வரச் சொல்லி ஒரு பெரிய 'லிஸ்டு கூடக் கொடுத்தனுப்பியிருக்கிறார். நீ வருகிறபோது நான் ஆஸ்பத்திரிக்குத்தான் எதிரே புறப்பட்டுக் கொண்டிருந்தேன்' என்றார் அவன் தந்தை. தன்னுடைய தந்தை ஜமீன்தாருக்கும் கண்ணாயிரத்துக்கும் எடுபிடி வேலையாளைப் போல் அலைந்து கொண்டிருப்பதை அறிந்த சத்தியமூர்த்தியின் மனம் கொதித்தது. அந்தக் கொதிப்போடு கொதிப்பாக இன்னொரு விளைவையும் எதிர்பார்த்தான் அவன். 'என் தந்தை ஜமீன்தாரும் கண்ணாயிரமும் கூப்பிட்டனுப்பியிருக்கிறபடி ஆஸ்பத்திரிக்குப் போகப் போகிறார். அங்கே அவர்கள் என் தந்தையிடம் "காலையில் உங்கள் பிள்ளையாண்டானும், அந்தத் திமிர்பிடித்த 'கார்ட்டூனிஸ்ட்'டும் இங்கே வந்திருந்தார்கள்' என்று தொடங்கிக் கோள் சொல்லிக் கோபமூட்டிவிடப் போகிறார்கள். அதைக் கேட்டுக் கொண்டு இங்கே வந்து அப்பா என்னிடம் கூப்பாடு போடப் போகிறார் என்று மாலையில் நடக்கப் போவதை இப்போதே அவனால் அநுமானம் செய்ய முடிந்தது. இத்தனை வயதுக்கு மேல் இப்படிக் கண்ணாயிரத்தைப் போல் மானம் மரியாதை தெரியாதவர்களுக்குக் காரியம் செய்து கொண்டு அலையாதீர்கள். அப்பா!' என்று தந்தைக்குச் சொல்ல நினைத்து அதைத் தான் சொல்வது பொருத்தமாக இராதென்று தன்னை அடக்கிக் கொண்டான் அவன். தந்தை ஆஸ்பத்திரிக்குப் போன பின்பு அம்மா அவனோடு நிறையப் பேசிக் கொண்டிருந்தாள். 'இந்த வயதில் ரொம்ப அலைகிறார். நல்லவர்கள்-கெட்டவர்கள் தெரியாமல் எல்லாரோடும் அலைகிறார்' என்று அம்மா அவனிடம் தந்தையைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டாள். -

பகல் உணவுக்கும் தந்தை வரவில்லை. சத்தியமூர்த்தி தனியாகவே சாப்பிட்டான். உணவுக்குப்பின் நடுக் கூடத்துத் தூணில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/422&oldid=595666" இலிருந்து மீள்விக்கப்பட்டது