பக்கம்:பொன் விலங்கு.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 431

பரப்புவதற்கு ஒரு கலாசாலை வேறே வைக்கப் போகிறாராம். இதெல்லாம் உன்னை எச்சரித்து வைப்பதற்காக கண்ணாயிரம் எனக்குச் சொன்னார். பேரைக் கெடுத்துக் கொள்ளாதே படித்தவனாக இலட்சணமாக விலகி இரு. ஜமீன்தார் பகை நமக்கு வேண்டாம்."

தந்தை இதைச் சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பாராமல் கண்ணாயிரத்தோடு வெளியே புறப்பட்டுப் போய்விட்டார். அவர் போனதும் அம்மா அருகே வந்து 'அப்பாவுக்கும் உனக்கும் என்னடா சண்டை?” என்று தூண்டித் தூண்டிக் கேட்டாள். 'ஒன்றுமில்லை என்று மழுப்பத்தான் முடிந்ததே ஒழிய அம்மாவுக்குத் தெளிவான பதில் எதுவும் சத்தியமூர்த்தியால் சொல்ல முடியவில்லை. அந்த வேளையில் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்த குமரப்பன் வந்து, "இந்தாடா, சத்தியம்! நீயும் உன் தந்தையும் உள்ளே பேசிக் கொண்டிருந்தபோது தபால்காரன் இதைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான்' என்று சொல்லி ஒரு கவரை நீட்டினான். கவரின்மேல் மல்லிகைப் பந்தல் கல்லூரி முத்திரை குத்தியிருந்தது. வார்டன் ஏதாவது அவசர வேலையாகப் பாலக்காட்டுப் பக்கம் புறப்பட்டுப் போயிருப்பார். 'வார்டன் ஊரில் இல்லாதபோது உதவி வார்டனாகிய நீங்களும் வெளியூரில் போயிருப்பது நல்லதில்லை. உடனே புறப்பட்டு வாருங்கள் என்று பிரின்ஸ்பால் ஒரு குரல் அழுதிருப்பார். அந்த அழுகையே இந்தக் கடிதமாயிருக்கும் என்பதாக நினைத்துக்கொண்டே கடிதத்தைப் பிரித்தால் கடிதம் கல்லூரி அதிபர் பூபதியிடமிருந்து வந்திருந்தது. அந்தக் கடிதத்தை அவசர அவசரமாக எழுதியிருந்தார் அவர்.

'அன்புக்குரிய சத்தியமூர்த்திக்கு. இன்று காலை எட்டு மணிக்கு உங்களைப் பார்க்கவேண்டுமென்று தேடி ஆள் அனுப்பினேன். நீங்கள் அதிகாலையிலேயே முதல் பஸ்ஸில் அவசரமாக மதுரைக்குப் போயிருப்பதாகத் தெரிந்தது. காலை ஒன்பதரை மணிக்கு இங்கிருந்து புறப்படுகிற மெயில் பஸ்ஸில் இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்புகிறேன். இன்று மாலைக்குள் இந்தக் கடிதம் உங்கள் கைக்குக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இதை இவ்வளவு அவசரமாக எழுதுகிறேன். நானும் என் மகள் பாரதியும் இன்று பகலில் இங்கிருந்து கார்மூலம் மதுரைக்குப் புறப்படுகிறோம். இன்று காலை இவ்வளவு அவசரமாகப் புறப்பட்டுச் செல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/433&oldid=595678" இலிருந்து மீள்விக்கப்பட்டது