பக்கம்:பொன் விலங்கு.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 பொன் விலங்கு

கிடைத்திருப்பதற்காக அவரைச் சந்தித்தவுடனே தன் பாராட்டுதல் களைத் தெரிவித்துக் கொள்ள எண்ணியிருந்த சத்தியமூர்த்தியைப் பேசவிடாமல் அவரே முந்திக்கொண்டு ஜமீன்தாரைப் பற்றி உற்சாகமாகக் கூற ஆரம்பித்து விட்டார்.

'உங்களுக்கு நம் ஜமீன்தாரவர்களைத் தெரியும் அல்லவா? பெரியகலா ரசிகர், நல்ல தமிழபிமானி. இவருடைய முன்னோர்களில் சிலரைப் பற்றிப் பழைய புலவர்கள் இரட்டை மணிமாலை என்ன, நான்மணி மாலை என்ன, பிள்ளைத் தமிழென்ன, கோவை உலா மடலென்ன என்று இப்படிக் கணக்கு வழக்கில்லாமல் பாடிப் புகழ்ந்திருக்கிறார்கள்.இந்தநிமிஷத்தில்கூடநம்முடைய ஜமீன்தாரைத் தூண்டிவிட்டுக் கூளப்பநாயக்கன் காதலையும், விறலிவிடு துதுவையும் பற்றிச் சொல்லச் செய்தால் விடிய விடியக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். பொழுது போவது தெரியாது மிஸ்டர் சத்தியமூர்த்தி! இதையெல்லாம்விட அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மல்லிகைப் பந்தல் கல்லூரியின் நிர்வாகக் குழுவில் நம் ஜமீன்தார் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறார் என்பதுதான்' என்றிவ்வாறாகச் சத்தியமூர்த்தி பதில் சொல்லவோ சிந்திக்கவோ அவகாசம் கொடுக்காமல் மிக ஆர்வமாகச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டே போனார் பூபதி. அவற்றைச் செவியில் ஏற்று மனத்தில் சிந்தித்த பொழுது சத்தியமூர்த்தியினால் பொறுத்துக் கொள்ள இயலாத உண்மைகளாயிருந்தன. அவை. ஓரளவு கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய கூளப்பநாயக்கன் காதலும் விறலிவிடு தூதுவும் ஜமீன்தாருக்குத் தெரிவதைக் காரணமாகச் சொல்லி அவரை அதற்காகத் தமிழபிமானி என்று குறிப்பிடும் பூபதியை நினைத்து, அவன் உள்ளுரப் பரிதாபப்பட்டான். ஜமீன்தாரும் கண்ணாயிரமும் ஏற்கெனவே உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அசையாமல் சத்தியமூர்த்தியையே கடுமையாக உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பூபதியோ நிலைமை புரியாமல் சத்தியமூர்த்தியைக் கையைப் பற்றி இழுத்து மிக அருகில் அழைத்துக் கொண்டு போய், ஜமீன்தாரிடமும் கண்ணாயிரத்தினிடமும், "சார் உங்களுக்கெல்லாம் ஓர் இளம் நண்பரை இப்போது அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்." என்று தொடங்கி மடமடவென்று சத்தியமூர்த்தியைப் பற்றி அவர்களுக்குச் சொல்லத் தொடங்கி விட்டார். ஜமீன்தாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/442&oldid=595688" இலிருந்து மீள்விக்கப்பட்டது