பக்கம்:பொன் விலங்கு.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 பொன் விலங்கு

கூறுவாள் என்றும் கற்பனை செய்யத் தோன்றியது அவனுக்கு, ஆனால் ஆஸ்பத்திரி எல்லையை அடைகிறவரைதான் இந்தக் கற்பனையெல்லாம் அவன் மனத்தில் நிகழ்ந்தது. ஆஸ்பத்திரிக்குள் போய் ஸ்பெஷல் வார்டில் நுழைந்த போதோ அங்கு மோகினியே இல்லையென்ற உண்மை மிகப் பெரிய ஏமாற்றமாக அவனை

எதிர்கொண்டது.

42

}; 'செய்கிற பாவங்களுக்காகச் சில சமயங்களில் சிலர் மன்னிக்கப்படு கிறார்கள். செய்யாத புண்ணியங்களுக் காகவும் சில வேளைகளில் சிலர் மன்னிக்கப்படுகிறார்கள். «βουή எதற்காகவும் எப்பொழுதுமே நிச்சயமாக மன்னிக்கப்படுவதில்லை.

>k

சத்தியமூர்த்தி திகைத்துப் போனான். மோகினியின் ஸ்பெஷல் வார்டில் இருந்த அந்த நர்ஸ் எங்காவது தென்பட்டால் அவளையாவது விசாரிக்கலாமென்று பார்த்தால் அவளையும் அங்கே காணமுடியவில்லை. வேறு வார்டுக்காவது, வேறு அறைக்காவது அவள் மாறியிருக்கலாமோ என்ற சந்தேகமும் அப்போது அவனுக்கு ஏற்பட்டது. எதற்கும் பக்கத்தில் யாரையாவது விசாரிக்கலாம் என்று அங்கே விசாரித்ததில் மோகினி டிஸ்சார்ஜ் .செய்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டதாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஏமாற்றத்தோடு அந்தப் பூவைஅவளுக்காக வாங்கிய மல்லிகைப் பூவை எப்படியும் அவளிடம் சேர்த்து விடவேண்டுமென்ற ஆவலோடு சங்கீத விநாயகர் கோயில் தெருவுக்குத் திரும்பிப் போனான் அவன். அங்கேயும் அவளுடைய வீடு பூட்டியிருந்தது. பூட்டிக் கிடந்த வீட்டைப் பார்த்து அவன் அப்படியே மலைத்துப்ப்ோய் நின்று விட்டான். பக்கத்து வீட்டுப் பையனை விசாரித்ததில் காலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/470&oldid=595719" இலிருந்து மீள்விக்கப்பட்டது