பக்கம்:பொன் விலங்கு.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி . 491

சில நிலையில்லாத செளகரியங்கள் கிடைக்கின்றன என்று மணம் வெறுத்த நிலையில் சிந்தித்துக் கொண்டே சென்றான் அவன். இரயில்வே மேற்பாலத்து இறக்கத்தில் பஸ் நிலையத்தருகே ஒரு சிறுவன் செய்தித்தாளின் மாலைப் பதிப்பை விற்றுக்கொண்டே எதிரே வந்தான். விமான விபத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காகச் சத்தியமூர்த்தி அவனிடம் ஒரு செய்தித்தாளை விலைக்கு வாங்கினான். - -

விமான விபத்தைப் பற்றிய செய்திகள் விவரமாக வெளியாகி இருந்தன. விபத்தில் மரணமடைந்தவர்களின் பிரேதங்களை அடையாளம் கண்டுபிடித்து எடுக்கவும் முடியாத அளவுக்குச்சேதம் நேர்ந்திருந்திருப்பதாகச் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. விமானத்தில் சென்று அகால மரணமடைந்தவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளும் புகைப்படங்களும் அவர்களில் மிக முக்கியமானவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளும் கூட அந்தச் செய்தித்தாளில் வெளியிடப்பட்டிருந்தன. -

தொழிலதிபரும், கல்வித் துறைக்கு எண்ணற்ற நிறுவனங்கள் மூலமாகவும், தம்முடைய கல்லூரி மூலமாகவும் பணி புரிந்திருப்பவருமாகிய பூபதி-பத்மபூரீ விருது பெறுவதற்கு டில்லி போய்க் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி இறந்து விட்டதைப் பற்றிப் பத்திரிகை ஆசிரியர் விமான விபத்தைப் பற்றித் தனியே எழுதியிருந்த தலையங்கத்தில் வருத்தப்பட்டிருந்தார். விடத்து நடந்த இடத்துக்குப் பூபதியின் மகள் பாரதியும், மஞ்சள்பட்டி ஜமீன்தாரும், கண்ணாயிரமும் புறப்பட்டுப் போகிறார்கள் என்ற செய்திகூடப் பத்திரிகையில் வந்திருந்தது. மறுநாள் மல்லிகைப் பந்தலுக்குப் போய் ஸ்தாபகர் தின விழாவுக்கு ஏற்பாடு செய்வதற்குப் பதில் தானே அநுதாபக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதை நினைத்து விதியின் கொடுமைக்கு மனம் கலங்கினான் சத்தியமூர்த்தி. இரவு வீட்டுக்குப் போய்த் தன் தந்தையைச் சந்தித்தபோது அந்தச் சந்திப்பையே வெறுக்கும் மனநிலையோடு இருந்தான் அவன். தந்தையோ அவனிடம் நேரில் பேச விரும்பாமல் தாயிடம் அவனைப் பற்றிக் குறை சொல்லிக் கோபித்துக் கொண்டிருந்தார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/493&oldid=595744" இலிருந்து மீள்விக்கப்பட்டது