பக்கம்:பொன் விலங்கு.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 507

அடுத்தபடியாகத் தமிழ்த் துறையின் சார்பில் காசிலிங்கனார் மாலை சூட்ட வேண்டும். காசிலிங்கனார் அன்று லீவு. கல்லூரிக்கே வரவில்லை. "மிஸ்டர் சத்தியமூர்த்தி யூ கம்...ஆன்..." என்று சத்தியமூர்த்தியைக் கூப்பிட்டு விட்டு, அவன் இருந்த பக்கமாகத் திரும்பினார் முதல்வர். அதற்கு இரண்டு நிமிஷங்களுக்கு முன்பு வரை அங்கே உட்கார்ந்திருந்த சத்தியமூர்த்தியை இப்போது திடீரென்று காணவில்லை. அவன் உட்கார்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. “ஜஸ்ட் நெள ஹி ஹாஸ் கான் அவுட்.லார்' என்று பக்கத்திலிருந்த பொருளாதார விரிவுரையாளர் எழுந்திருந்து முதல்வருக்குப் பதில் கூறினார். முதல்வரின் முகத்தில் ஈயாடவில்லை. ஜமீன்தாரோ அப்போதுதான் நிதானமாக மேஜை மேல் இருந்த ரோஜாப்பூ ஒன்றை எடுத்து அதன் இதழ்களை விரல்களிடையே கசக்கியபடி மெதுவாகப் புன்முறுவல் பூக்க முயன்று கொண்டிருந்தார். முகம்தான் புன்முறுவல் பூக்க முயன்று கொண்டிருந்ததே ஒழியக் கைவிரல்கள் ரோஜாப்பூ மாலைகளின் பூவிதழ்களை அழுத்திக் கசக்கிக் கொண்டிருந்தன.

தேநீர் விருந்துக்குப் பின் நிகழ்ந்த பாராட்டுக் கூட்டத்திலே மாலை போட வேண்டிய நேரத்தில் ஜமீன்தாரை வேண்டுமென்றே அவமானப்படுத்தினாற் போல் சத்தியமூர்த்தி வெளியே எழுந்திருந்துபோய்விட்டது தெரிந்து கல்லூரி முதல்வரின் மனத்தில் பெருங்கோபம் மூண்டிருந்தது. "இந்தத் தமிழ் டிபார்மென்ட் ஆட்களே இப்படித்தான் இவர்களோடு எப்பவும் பெரிய தலைவலிதான்' என்று மேடையில் பக்கத்தில் அமர்ந்திருந்த ஜமீன்தாருக்கும் கேட்கும் குரலில் முணுமுணுத்தார் முதல்வர். ஜமீன்தார் முகத்தில் புன்முறுவலோடு அமர்ந்திருந்தாலும் அவர் உள்ளம் சத்தியமூர்த்தியை நினைத்து எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தது. மதுரை-ஜென்ரல் ஆஸ்பத்திரியில் சத்திய மூர்த்தியையும், குமரப்பனையும், முதன் முறையாகத் தான் சந்திக்க நேர்ந்த சம்பவம், மோகினி விஷயமாகச் சத்தியமூர்த்தியின் மேல் தனக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, இப்போது தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் வந்து விட்ட கல்லூரியில் தனக்கே மாலை போட விரும்பாதவனைப் போல் அவன் நடுக் கூட்டத்தில் எழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/509&oldid=595762" இலிருந்து மீள்விக்கப்பட்டது