பக்கம்:பொன் விலங்கு.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 பொன் விலங்கு

வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டவனைப் போல் கல்லூரி எல்லையில் நிமிர்ந்து நடந்து கொண்டிருந்தான். அன்று முதல் பாடவேளை நேரத்திலேயே அவனுக்கு முக்கியமான வகுப்பு இருந்தது. சத்தியமூர்த்தியை முதல்வர் கூப்பிடுவதாகப் பாதி வகுப்பில் கல்லூரி ஊழியன் வந்து கூப்பிட்டான். 'இப்போது வருவதற்கில்லை. வகுப்பை முடித்துவிட்டு வருகிறேனென்று சொல். மறுபடியும் நடு வகுப்பில் உள்ளே நுழைந்து என்னைக் கூப்பிடாதே" என்று பதில் சொல்லி அந்த ஊழியனைத் திருப்பி அனுப்பிய பின் ஒன்றுமே நிகழாதது போல் பழைய புன்முறுவலோடு மாணவர்கள் பக்கமாகத் திரும்பி வகுப்பைத் தொடர்ந்தான் சத்தியமூர்த்தி. மறுபடியும் வேண்டுமென்றே யாரோ தூண்டிவிட்டுச் சொல்லியனுப்பியது போல அதே ஊழியன் பத்து நிமிஷங் கழித்து வகுப்பிற்குள்ளே வந்து "சார் பிரின்ஸிபால் உடனே கூப்பிடறாங்க" என்று தொந்தரவு செய்தான். மாணவர்களுக்கு அப்போது அந்த ஊழியனை அறைந்து விடலாம்போல் எரிச்சலாக இருந்தது. ஹிஸ்டரி ஆஃப் லாங்வேஜ் அண்ட் லிட்ரேச்சர் (மொழி இலக்கிய வரலாறு) வகுப்பை அன்றுதான் நடத்தத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. மொழி இலக்கிய வரலாற்றைப் பற்றி அவன் அழகுறத் தொடங்கியிருந்த சொற்பொழிவு பாதியிலே நிற்கும்படி இரண்டு முறை குறுக்கிட்டுப் பிரின்ஸிபால் கூப்பிடுவதாக அந்த ஊழியன் தொல்லைப்படுத்தியதை வகுப்பில் யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சத்தியமூர்த்திக்குப் பொறுமை பறிபோய்விட்டது.

47

k

பிறரை ஏவுவதிலும் பிறருக்கு ஆணையிடுவதிலும் திருப்திப்படுகிற மனமுள்ளவர்களால் யாரையாவது ஏவாமலும் யாருக்காவது ஆணை யிடாமலும் சும்மா இருக்கவே ԱՔգահ:5յ.

k
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/516&oldid=595770" இலிருந்து மீள்விக்கப்பட்டது