பக்கம்:பொன் விலங்கு.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 பொன் விலங்கு

பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். வாங்கிய கடித உறையை பிரித்துப் படிக்கவும் நேரமில்லாமல் அடுத்த பாடவேளையிலும் அவன் வகுப்பு எடுக்க வேண்டியிருந்தது. எனவே கல்லூரி முத்திரையோடு பிரின்ஸ்பால் தனக்கு அனுப்பியிருந்த அந்தக் கடித உறையை அப்படியே வாங்கிக் கையிலிருந்த புத்தகத்தில் சொருகிக் கொண்டு அவசர அவசரமாக அவன் அடுத்த வகுப்பிற்குள் நுழைய வேண்டியதாயிற்று. அந்த வகுப்பையும் முடித்துக் கொண்டு வெளியேறிய பின்புதான் அவனுக்கு ஒய்வு இருந்தது. ஆசிரியர்கள் தங்கும் அறைக்குச் சென்று அமர்ந்துகொண்டு அந்த உறையைப் பிரித்துப் படிக்கலானான் சத்தியமூர்த்தி, முதல் நாள் மாலையில் கல்லூரியின் புதிய நிர்வாகியைப் பாராட்டி நடைபெற்ற கூட்டத்தில் நடுவே எழுந்து போனதற்குக் காரணம் கேட்டும் வேறு சில பழைய, புதிய குற்றங்களைச் சுமத்தியும் எக்ஸ்பிளநேஷன் கோரியிருந்தார் கல்லூரி முதல்வர். காலையில் நேரில் கூப்பிட்டனுப்பியபோது வர மறுத்ததை இன்ஸ்டார்டிநேசன் (கீழ்ப் பணியாமை) என்றும் அத்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தின் கீழே அது முடிகிற இடத்தின் ஒரு கோடியில் காப்பி-டு-தி கரஸ்பாண்டென்ட் (நிர்வாகிக்கும் நகல் அனுப்பப்பட்டிருக்கிறது) என்று குறித் திருந்ததையும் அவன் நிதானமாகக் கவனித்து படித்துக் கொண்டான். இப்படி ஒரு முறைக்கு இரு முறையாக அந்தக் கடிதத்தைப் படித்து முடித்தபின் மறுநாள் எழுத்துமூலம் அதற்கு எழுதிக் கொடுக்க வேண்டிய மறுமொழியைப் பற்றிக்கூட இப்போதே அவன் மனம் சிந்திக்கத் தொடங்கிவிட்டது. அப்படிச் சிந்திக்கத் தொடங்கியபோதில் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் அவன் திரும்பத் திரும்ப ஆச்சரியப்பட்டான். சிந்தனைச் சுதந்திரம், சொற்சுதந்திரம், செயல் சுதந்திரம் என்று மேடைகளில் முழங்குவதும், இதழ்களில் எழுதும்போதும் எவ்வளவுதான் கூறினாலும் இன்னொருவன் தமக்குப் பணிந்து அடங்குகிறானா இல்லையா என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் ஒரு சிறிதும் இல்லாத கெளரவமான மனிதனே உலகில் கிடையாதோ என்று தோன்றியது சத்தியமூர்த்திக்கு. பிறரை ஏவுவதிலும் பிறருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/518&oldid=595772" இலிருந்து மீள்விக்கப்பட்டது