பக்கம்:பொன் விலங்கு.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாதி - - 525

இருந்தன. ஒரு கடிதத்தில் கல்லூரி நிர்வாகக் குழுவும் அதன் தலைவரும் முதல்வரும் சத்தியமூர்த்தி உதவி வார்டனாக இருந்து இதுவரை தன் கடமைகளைச் சரி வரப் புரியவில்லை என்று கருதுவதால் அவனை அந்தப் பதவியிலிருந்து உடனே நீக்குவதாகவும், அவனிடம் உள்ள விடுதி சம்பந்தமான காரியங்களை வார்டனிடம் சார்ஜ் ஒப்படைத்து விட்டு விலகிவிடவேண்டும் என்பதாகவும் கண்டிருந்தது. இன்னொரு கடிதத்தில் ஏற்கெனவே முதல்வர் அவனிடம் கேட்டிருந்த எக்ஸ்பிளநேஷனுக்குச் சரியான மறுமொழி கொடுக்கப் படவில்லை என்றும் அடுத்தநாள் காலைக்குள் இன்ன இன்ன குற்றச் சாட்டுகளுக்குப் பொருந்திய மறுமொழி கொடுத்தாக வேண்டு மென்றும் கண்டிருந்தது. சூழ்நிலை மிகவும் மனம் வெறுக்கத் தகுந்த முறையில் உருவாகி விட்டதைப் பார்த்து அவன் கவலைப் படவில்லை. மறுநாள் அவன் கல்லூரி முதல்வருக்கு எழுதிய மறுமொழிக் கடிதம் இப்படி ஆரம்பமாகியிருந்தது. -

"என்னுடைய நினைவு, சொல், செயல் ஆகியவற்றின் நன்மை தீமைகளை உற்று ஆராய்ந்து கடுமையாகத் தாக்குவதற்கும். பாராட்டுவதற்கும், குத்திக் காட்டுவதற்கும் எனக்குள்ளேயே பாரபட்சமற்ற விமர்சகன் ஒருவன் இருக்கிறான். அந்த விமரிசகனுக்குத் தான் மனச்சாட்சி என்று பெயர். மற்றவர்களுடைய பொறாமையும் காழ்ப்பும் நிறைந்த விமரிசனத்தைவிட என்னுள்ளேயே இருக்கும் இந்த உண்மையான விமரிசகனுடைய கருத்துக்குத்தான் நான் அதிகமான மதிப்பளிக்க முடியும். அப்படி மனச்சாட்சிக்கு மதிப்பளிக்காமல் எந்தக் காரியத்தையும் நான் செய்ததில்லை; செய்ய நினைத்ததுமில்லை. விரிவுரை யாளனாகவும், விடுதி உதவி வார்டனாகவும் இருந்து, நான் இந்தக் கல்லூரியில் ஒவ்வொரு விநாடியும் என்னுடைய காரியங்களை மனச்சாட்சிக்குத் துரோகம் செய்யாமல் நன்றாகத்தான் ஆற்றியிருக்கிறேன். என்னை உதவி வார்டன் பதவியிலிருந்து விலக்கியிருப்பதாக நிர்வாகக் குழுவின் சார்பில் எழுதியிருக் கிறீர்கள். விலக்கவும் நீக்கவும் உங்களுக்குத் தாராளமாக அதிகாரம் உண்டு. எல்லாவற்றையும் செய்து முடிக்கும் அதிகார முள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/527&oldid=595782" இலிருந்து மீள்விக்கப்பட்டது