பக்கம்:பொன் விலங்கு.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 543

வாசற்படியிலேயிருந்து கீழே இறங்கினாரோ இல்லையோ, அப்படியே அலை அலையாய்ப் பையன்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு ஊர்வலம் போலக் கூடப் போறாங்க...அவர் பேரைச் சொல்லி வாழ்க என்கிற குரல்களும், நீதி வேண்டும்' என்கிற குரல்களுமாக வானத்தையே பிளந்திடும் போலிருக்கு. ஜமீன்தார் ஐயா பேரிலேயும் பிரின்ஸிபால் ஐயா பேரிலேயும் பையன்களுக்கு ஒரே வெறுப்பா மூண்டிருக்கு" என்று டிரைவர் முத்தையா திரும்பி வந்து ஏதோ இரகசியத்தைச் சொல்வதுபோல் அவளிடம் சொல்லியபோது அப்போது அதைச் சொன்னால்தான் அவளுக்கு ஆறுதலாயிருக்கும் என்று அவன் தனக்குத்தானே புரிந்து கொண்டிருப்பதுபோல் தெரிந்தது. தளர்ந்து நலிந்த குரலில் பாரதி முத்தையாவைக் கேட்கலானாள்: - - 'முத்தையா காரில் இருந்தபடியே அவரைப் பார்த்தாயா? அல்லது நீ பக்கத்தில் போய் அவரைப் பார்த்தாயா?"

'பக்கத்தில் நெருங்க முடியுமா அம்மா? எவ்வளவு பெரிய

கூட்டம்?" - - -

'அதற்கில்லை. இப்படியெல்லாம் பொய்யாகப் பழிசுமத்தி அவரை மனம் தளரச் செய்திருக்கிறார்கள் பாவிகள். அதனால் . மிகவும் வாடிச் சோர்ந்து போயிருக்கிறாரோ என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் உன்னைக் கேட்டேன்..." - -

"அவருக்கு என்னம்மா சோர்வு? நியாயம் அவர் பக்கத்திலே இருக்குது.ராஜாவாக நடந்துபோகிறாரு..."

டிரைவர் முத்தையா இயல்பாக இப்படிக் கூறினானா அல்லது தன் மனத்தைப் புரிந்துகொண்டு; இப்படிக் கூறினால் தான் தனக்குத் திருப்தியாயிருக்குமென்று கூறினானா என்பதைப் பாரதியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பத்தரை மணிக்கு ஜமீன்தாரும், கண்ணாயிரமும் உணவு மேஜைக்கு வந்தார்கள். அவர்களைப் பார்க்கப் பிடிக்காமல்-அவர்களோடு பேசவும்-சேர்ந்து சாப்பிட உட்காரவும் கூடப் பிடிக்காமல் பாரதி தோட்டத்துப் பக்கம் எழுந்து போயிருந்தாள். ஆனால் ஜமீன்தாரோ அவளைத் தேடிக் கொண்டு தோட்டத்துக்கு வந்து விட்டார். அவருடைய முகத்தைப் பார்க்க வெறுப்பாகவும் அருவருப்பாகவும் இருந்தது அவளுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/545&oldid=595801" இலிருந்து மீள்விக்கப்பட்டது