பக்கம்:பொன் விலங்கு.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 - பொன் விலங்கு

'அதைப்பத்தி உனக்கென்ன வந்ததும்மா! அதெல்லாம் நிர்வாக விஷயம். நீ ஒண்ணும் தலையிடாதே...' என்று அவள் அதைப் பற்றி பொதுவாகத் தன்னிடம் விசாரிப்பதையே விரும்பாதவர்போல் பேச்சை வெட்டினார் ஜமீன்தார். அப்பொழுது அவருடைய கண்கள் சிவந்து கொடிய பார்வையோடு இருந்தன. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறாற் போல கடுங்கோபம் துள்ளிக் கொண்டிருந்தது.

'காலேஜ் ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை ஒரு ஸ்டிரைக் கூட வந்ததில்லை. அப்பா நயமாகவும் பயமாகவும் எல்லாவற்றையும் சமாளித்து விடுவார். இப்பத்தான் எல்லாப் போதாத காலமும் ஆரம்பமாயிருக்கு வீணாகக் காலேஜுக்கும் கெட்ட பேர்." என்று அவள் மேலும் எதையோ சாதாரணமாகப் பேசத் தொடங்கியபோது 'வாயை மூடு? உனக்கு வேறே வேலை இல்லை? நீ முதல்லே உள்ளாரப் போ. சொல்றேன். ஸ்டிரைக். மண்ணாங்கட்டி எல்லா யழவும்தான் வரும்...அதைக் கவனிச்சுக்கத்தான் நானும் பிரின்ஸ்பாலும் இருக்கோமே? உனக்கென்னா வந்திச்சுங்கறேன்?" என்று சொல்லிச் சீறத் தொடங்கிவிட்டார் ஜமீன்தார். யாரையோ உடனே கொலை செய்துவிடவேண்டும் போன்ற அவ்வளவு கோபம் அப்போது அவருடைய முகத்தில் மிகவும் குரூரமாகத் துடித்துக்கொண்டிருந்தது. பாரதி மேலும் ஒன்றும் பேசாமல் உள்ளே போய்விட்டாள். ஒவ்வொரு பெண்ணின் அநுதாபமும் வேறெதையும் செய்ய முடியாதவரை வெறும் அழுகையில் போய்த்தான் நிறைய முடியும். அதையேதான் அப்போது அவளும் செய்தாள்.

51

米 படிப்பு பெறும் தீக்குச்சியைப் போன்றதுதான். எந்தப் பிரச்சினை யோடாவது உராயும் போதுதான் அதிலிருந்து - சிந்தனைச்சுடர் புறப்படுகிறது.

米。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/548&oldid=595804" இலிருந்து மீள்விக்கப்பட்டது