பக்கம்:பொன் விலங்கு.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 பொன் விலங்கு

அன்பின் பரிசுத்தமான தேவையே ஓர் ஏக்கமாக வந்து நிற்கிறது இப்போது "அதெல்லாம் நிர்வாக விஷயம்; நீ ஒண்ணும் தலையிடாதே' என்று ஜமீன்தார் சீறி விழுந்து அவளை மிரட்டியிருந்தாலும் அவளுடைய மனம் சத்தியமூர்த்தியின் வெற்றிக்காகத்தான் இன்னும் ஏங்கிக்கொண்டிருந்தது. சத்திய மூர்த்தியை யாரோ நண்பர்கள் ஜாமீன் கொடுத்துப் போலீஸ் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றார்கள் என்பதையும் அப்போது மாணவர்களின் பெருங் கூட்டம் அநுதாபத்தோடு அவரைச் சூழ்ந்தது என்பதையும் டிரைவர் முத்தையா தானாகவே வந்து தெரிவித்தபோது, அவள் மனத்துக்கு ஆறுதலாயிருந்தது.

வேலை நிறுத்தம் தீவிரம் அடையவும் கண்ணாயிரமும் முதல்வரும் பதறிச் சர்க்கிள் இன்ஸ்பெக்டரைக் தேடிக் கொண்டு போனதையும், ஜமீன்தாரும் நிர்வாகி என்ற முறையில் மாவட்டக் கலெக்டருக்கு டெலிபோனில் தகவல் தெரிவித்ததையும் அதே வீட்டில் உடனிருந்தே கவனித்துக் கொண்டிருந்தும் ஒன்றுமே அவற்றிற்கெதிராகச் செய்ய முடியாமல் தவித்தாள் பாரதி. கருத்தழகும் காட்சியழகும் மிக்க இந்த சத்தியமூர்த்தி என்னும் அபூர்வமான இலட்சிய ஆசிரியர் தங்கள் கல்லூரிக்கே வேலைக்கு வந்துவிட வேண்டுமென்று வருட ஆரம்பத்திலே இன்டர்வியூவின் போது தான் காண்பித்த ஆவல் எல்லாம் இப்போது நினைவு வந்து அவளை அழவைத்தன. சுக துக்கங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையின் முடிவற்ற பாதையில் இன்னும் ஒரடி முன்னால் எடுத்துவைக்க எப்போதும் நான் தயார்'- என்பதுபோல் வலது பாதம் முன் இருக்க நிமிர்ந்து உட்கார்ந்து யாவும் ஞாயும் யாராகியரோ?' என்ற குறுந்தொகைக் கவிதையை அவர் தன் தந்தையிடம் நயமாக விளக்கிச் சொல்லியதெல்லாம் இப்போது அவளுக்கு ஞாபகம் வந்தன. பழைய ஞாபகங்களாலும், தந்தையை இழந்த பரிதாப நினைவுகளாலும் தன்னுடைய ஆசையையெல்லாம் கொள்ளை கொண்ட இலட்சிய ஆசிரியருக்கு வந்துவிட்ட துன்பங்களை எண்ணி வருந்தும் வருத்தத்தாலும் நெடுநேரம் மெளனமாய் அறைக்கதவைத் தாழிட்டுக்கொண்டு கண்ணிர் பெருக்கிய வண்ணம் இருந்தாள் அவள். மாணவர்கள் எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/550&oldid=595807" இலிருந்து மீள்விக்கப்பட்டது