பக்கம்:பொன் விலங்கு.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 565

அப்படிக் காத்திருந்த ஒவ்வொரு விநாடியும் ஒரு தனி யுகமாய் நகருவதாகத் தோன்றியது பாரதிக்கு. அவள் எதை அறிந்து கொள்வதற்காகக் காத்திருந்தாளோ அதை அறிந்து கொள்ள விரும்பியதற்கும் அறிந்துகொண்டு முடிப்பதற்கும் இடையிலுள்ள காலம் ஒவ்வொரு கணமும் கனமாகவும் மெதுவாகவும் தயங்கி நின்றது. அந்த வராந்தாவின் இரும்பு அளிக்கு அப்பால் அளவாகக் கத்திரித்து விடப்பட்ட தோட்டத்து மரங்களின் மறுகோடியில் டிரைவர் முத்தையாவின் தலை தெரிவதை எதிர்பார்த்து அவளுடைய கண்கள் அந்தத் திசையிலேயே இமையாமல் நோக்கிக் கொண்டிருந்தன. கடைசியாக அவனும் ஒரு வழியாக வந்து சேர்ந்தான். கார்ச் சாவிக் கொத்தை வலது ஆள்காட்டி விரலில் கொடுத்துச் சுழற்றிக் கொண்டே டிரைவர் முத்தையா விரைவாக நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போதே அவள் இதயம் படபடவென்று வேகமாக அடித்துக் கொண்டது. அவன் அருகில் வந்து வராந்தா மேடையின் இரும்பு அளிக்குக் கீழே தனக்கு எதிரில் நின்றதும், சிறிது நேரத்துக்கு முன்பு காரில் அந்த மதுரைக் கணக்குப்பிள்ளைக் கிழவரை அழைத்துக் கொண்டு ஜமீன்தாரும், கண்ணாயிரமும் எங்கோ புறப்பட்டுப் போனார்களே? அவரை எங்கே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தார்கள் என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்பதற்குத் துடிதுடித்துக் கொண்டிருந்தாள் பாரதி. ஆனால் டிரைவர் முத்தையாவோ அவள் கேள்வி கேட்பதற்கு இடமே வைக்காமல் என்ன என்ன சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் தானாகவே சொல்லத் தொடங்கிவிட்டான். அடுத்தவர்கள் தங்களிடம் எப்போது எதை எதிர்பார்த்துத் தயங்கி நிற்பார்கள் என்று குறிப்பறிந்து நடந்து கொள்கிற சாமர்த்தியம் படித்துப் பட்டம் பெற்ற பலரிடம்கூட இல்லாமல் போகிற அதே வேளையில் படிப்பறிவில்லாத வெறும் அநுபவசாலிகள் சிலரிடம் அந்தச் சாமர்த்தியம் அளவற்றிருப்பதைச் சில சமயங்களில் நாம் கண்டு வியக்க நேரிடும். டிரைவர் முத்தையா தானும் அத்தகைய அநுபவசாலிகளில் ஒருவன் என்பதை அப்போது நிரூபித்தான்.

'பாரதி அம்மா உங்களுக்குத் தெரியுமா சேதி காரியங் களெல்லாம் ரொம்பத் தந்திரமாயில்லே நடக்குது? நேத்திக்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/567&oldid=595825" இலிருந்து மீள்விக்கப்பட்டது