பக்கம்:பொன் விலங்கு.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 57.1

மட்டும் பிழைக்க ஆசைப்படவில்லை. மறுநாள் கலெக்டரும் மாவட்டப் போலீஸ் அதிகாரியும் மல்லிகைப் பந்தலுக்கு வந்து முகாம் செய்து விசாரிப்பதாக இருந்தது. அதற்குள் இப்படி ஒரு கடிதத்தில் கையெழுத்து வாங்கித் தன்னை அடக்கி வீழ்த்தி விட முயலும் அவர்களுடைய சூழ்ச்சியைப் புரிந்துகொள்ளாமல் ஓரளவு படிப்பும் பகுத்தறிவும் உள்ள தந்தையே ஏமாந்ததை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை அவனுக்கு அவரைச் சொல்லி என்ன குற்றம்? பணமும் செல்வாக்கும் இருப்பதனால் ஜமீன்தாரும் கண்ணாயிரமும்தான் இந்த உலகத்தின் அதி தேவதைகள் என்று நினைத்துச் சதாகாலமும் அவர்களைச் சுற்றிக்கொண்டு திரிகிறவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? என்றெண்ணி வருந்தினான் அவன். தந்தை போன பின்பு சிறிது நேரத்துக்கெல்லாம் குமரப்பன் கீழே கடையிலிருந்து மேலே மாடிக்குப் படியேறி வந்து விசாரித்தான்.

米 அதிகமாக அன்பு செய்கிறவன் அதிகக் கவலைப்பட்டுத்தான் ஆக வேண்டும். ஏனென்றால், அவனுடைய கவலையின் எல்லைகள் அவனது அன்பு வியாபித் திருக்கிற எல்லாப் பரப்புக்கும் உரியது. 米 “என்னடா, உன் அப்பா திடீரென்று கோபமாக வந்தார். திரும்பிப்போகும்போதும் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு போகிறாரோ? ஏன் இப்படிவந்ததும் வராததுமாக உடனே திரும்பிப் போய்விட்டார்?' என்று வந்து விசாரித்த நண்பன் குமரப்பனுக்குத் தன் தந்தை வந்துவிட்டுப் போன காரியத்தையும் நடந்தவற்றையும் விவரித்தான் சத்தியமூர்த்தி, அதைக் கேட்டுவிட்டுக் குமரப்பன், 'நல்ல் காரியம் செய்தாய் எதிலாவது கையெழுத்து வாங்கிக்கொண்டு உன்னை நிரந்தரமாகக் கம்பி எண்ண வைக்க முயலுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/573&oldid=595832" இலிருந்து மீள்விக்கப்பட்டது