பக்கம்:பொன் விலங்கு.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 593

மோகினியின் முகபாவத்தில் தெரிந்த மாறுதலையும், அவளுடைய கண்கள் கலங்குவதையும் பார்த்துப் பேச்சை அவ்வளவில் நிறுத்தினாள்.

'ஏனக்கா. இப்படி? உங்களுக்கு சத்தியமூர்த்தியைத் தெரியுமா..." -

பதில் சொல்லாமல் கண்ணிர் உகுத்துக் கொண்டிருந்தாள் மோகினி. பாரதி மறுபடியும் அருகில் வந்து, "அவரை ஏற்கெனவே உங்களுக்குத் தெரியுமா அக்கா?" என்று வினவியபோது, தெரியும் என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தாள் மோகினி, சிறிது நேரம் கழித்து, "அப்புறம் என்ன நடந்தது பாரதி? மாணவர்கள் வேலைநிறுத்தம் எப்படி நின்றது? அவருக்கு நியாயம் எவ்வாறு கிடைத்தது?" என்று மோகினியே அழுகையை நிறுத்தி விட்டுத்தன்னைத்துண்டிக்கேட்டபோது பாரதி ஆச்சரியமடைந்தாள். எனினும் தன் ஆச்சரியத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்தவை எல்லாவற்றையும் மோகினிக்குக் கூறினாள் அவள். மோகினியோ மேலும் மேலும் வேதனை கலந்த ஆர்வத்தோடு சத்தியமூர்த்தியைப் பற்றிப் பாரதியிடம் ஒவ்வொன்றாக வினாவிய வண்ணம் இருந்தாள். "இந்த ஊரில் அவர் எங்கே தங்கியிருக்கிறார் பாரதி? அவர்தான் ஹாஸ்டல் உதவி வார்டன் என்று கூறினாயே; அதனால் ஒருவேளை ஹாஸ்டலிலேயே தங்கியிருக்கிறாரோ?' என்று மோகினி கேட்டபோது சத்திய மூர்த்தியைப் பற்றி அவள் காட்டிய அக்கறையும் சிரத்தையும் பரபரப்பும் பாரதியின் மனத்தில் வியப்பையும் சந்தேகத்தையும் வளர்த்தன. நேற்றோ முந்தாநாளோ அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவரைப்பற்றி, இந்த முதியவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா அக்கா? என்று இவளிடம் நான் விசாரித்தபோது, எனக்கு ஒன்றுமே தெரியாதம்மா என்று அப்பாவிபோல் பதில் கூறினாளே? இப்போது அந்த முதியவரின் மகனான சத்தியமூர்த்தியைப்பற்றி மட்டும் இப்படித்துண்டித்துண்டி விசாரிக்கிறாளே சத்தியமூர்த்தியைப்பற்றி மட்டும் இவளுக்குஎன்ன இத்தனை அக்கறை? என்று மனத்துக்குள் எண்ணினாள் பாரதி. 'சத்தியமூர்த்தியை மட்டும் உங்களுக்கு எப்படித் தெரியும் அக்கா?

பொ. வி - 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/595&oldid=595856" இலிருந்து மீள்விக்கப்பட்டது